Crime | 300 ரூபாய் தராததால் கொடூரம்.. மனைவி கண்முன்னே கணவனைக் குத்திக் கொன்றவர் கைது..
கத்தியை காட்டி 300 ரூபாய் தருமாறு மிரட்டியுள்ளார் ராஜ் தாஸ். அவரை அங்கிருந்து போக சொல்லியிருக்கிறார் ராம் கிஷோர். ஆனால் அதற்கு மறுத்த ராஜ் தாஸ் 300 ரூபாய் கொடுத்தால்தான் போவேன் என்று சொல்லியுள்ளார்.
![Crime | 300 ரூபாய் தராததால் கொடூரம்.. மனைவி கண்முன்னே கணவனைக் குத்திக் கொன்றவர் கைது.. Man stabbed to death in front of wife in west Delhi homeless man arrested Crime | 300 ரூபாய் தராததால் கொடூரம்.. மனைவி கண்முன்னே கணவனைக் குத்திக் கொன்றவர் கைது..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/1fdc2bbf9edc0f2ce6dacbbd22eee84b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கத்தியை காட்டி வழிப்பறி செய்யும்போது கொலை செய்துவிட்டு, பர்ஸ் மற்றும் மொபைல் ஃபோனை எடுத்து சென்ற நபர் கைது செய்யப்பட்டார். ராம்புராவின் ஹரி நகர் பகுதியை சேர்ந்தவர் தான் ராம் கிஷோர். 20 வயது ஆகும் இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு, நைனா என்பவருடன் திருமணமாகி மேற்கு டெல்லியின், பிரயோக் விஹார் பகுதியில் வசித்து வருகிறார். சாலையோரத்தில் மோமோ விற்கும் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார் ராம் கிஷோர். இவரும் இவர் மனைவியும் வெளியே சென்றிருந்தபோது, வழியில் மறைத்து பணம் கேட்டு மிரட்டியதாகவும், மிரட்டும்போது வாக்குவாதமாகி சண்டை வந்ததில், ராம் கிஷோர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொன்றுவிட்டு அவரது பர்ஸ் மற்றும் மொபைல் போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். அந்த நபரை கடந்த வியாழக்கிழமை போலீசார் கைது செய்தனர். அவருடன் இருந்து பர்ஸும், மொபைல் போனும் மீட்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாமின் சோனிதாபூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ் தாஸ் என்பவர், டெல்லிக்கு வந்து சாலையோரங்களில் வீடின்றி வாழ்ந்து வருகிறார். கடந்த புதன் கிழமை காலை இவர்தான் அந்த கொலையை செய்துள்ளார். அன்று காலை 10 மணி அளவில் ஹரி நகரில் உள்ள ஜஸ்ஸா ராம் பூங்காவிற்கு காற்றோட்டமாக நடந்துவிட்டு வரலாம் என்று ராம் கிஷோரும் மனைவி நைனாவும் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அமர்ந்திருந்தபோது, ராஜ் தாஸ் கத்தியுடன் சென்று மிரட்டியுள்ளார். கத்தியை காட்டி 300 ரூபாய் தருமாறு மிரட்டியுள்ளார் ராஜ் தாஸ். அவரை அங்கிருந்து போக சொல்லியிருக்கிறார் ராம் கிஷோர். ஆனால் அதற்கு மறுத்த ராஜ் தாஸ் 300 ரூபாய் கொடுத்தால்தான் போவேன் என்றுள்ளார்.
பின்னர் கடும் கோபம் அடைந்த ராம் கிஷோர் எழுந்து அவரை திட்டியுள்ளார். பின்னர் இருவருக்கும் சண்டையாக அது மாறியது. சண்டையில் நடந்த சலசலப்பில் கத்தியால் ராம் கிஷோரின் கழுத்தை ராஜ் தாஸ் அறுத்துவிட்டார். கழுத்து அறுபட்டதும் அப்படியே கீழே விழுந்த ராம் கிஷோரிடம் இருந்து பர்ஸையும், மொபைல் போனையும் எடுத்து சென்றுள்ளார் ராஜ் தாஸ்.
இது குறித்து போலீசார் பேசுகையில், "ராம் கிஷோர் அவரை தள்ளியபோது, கோபம் கொண்ட ராஜ் தாஸ் அவரை கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். அதில் நடந்த களேபரத்தில் கத்தியால் கழுத்தில் சீவிவிட்டு பர்ஸ் மற்றும் மொபைல் போனை எடுத்து சென்றுள்ளார் ராஜ் தாஸ். கீழே விழுந்த கணவரை பார்த்து அலறிய நைனாவின் குரல் கேட்டு கூட்டம் கூடியது. ஆனால் கூடிய கூட்டத்தில் ஒருவர் கூட போலீசுக்கு தெரிவிக்கவில்லை. அவர்களது உறவினரின் எண்ணை நைனாவிடம் வாங்கி அவர்களுக்குத்தான் தகவல் தெரிவித்துள்ளனர்.
கிஷோரின் அண்ணன் அவரை வேகமாக தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அப்போது அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்தனர்.
கூடுதல் டிசிபி பிரஷாந்த் கவுதம் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது, அவர் பேசுகையில்,"தாக்கப்பட்ட ராம் கிஷோர் மருத்துவமனைக்கு வரும்போதே உயிரற்றுதான் இருந்தார் என்று மருத்துவமனை தெரிவித்தது. இந்திய அரசியலமைப்பு சட்ட என் 302 மாற்றும் 397 ஆகிய பிரிவுகளின் கீழ், கொலை குற்றம் மற்றும், திருடுவதற்காக கொலை முயற்சி செய்தல் அல்லது கடுமையாக தாக்குதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்துவிட்டோம். திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன" என்று தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)