Crime: நோயாளியுடன் உடலுறவு.. பறிபோன நீரிழிவு நோயாளியின் உயிர்...விசாரணையில் சிக்கிய நர்ஸ்!
மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் செவிலியர் ஒருவர் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Crime: நோயாளியுடன் உடலுறவு.. பறிபோன நீரிழிவு நோயாளியின் உயிர்...விசாரணையில் சிக்கிய நர்ஸ்! Britain nurse fired over affair with patient who died during intercouse in hospital Crime: நோயாளியுடன் உடலுறவு.. பறிபோன நீரிழிவு நோயாளியின் உயிர்...விசாரணையில் சிக்கிய நர்ஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/11/330e604f32334f7be91a95c306a4c9711689070503034572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Crime: மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் செவிலியர் ஒருவர் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நோயாளி உயிரிழப்பு
பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் பிரபல மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தவர் பெனலோப் வில்லியம்ஸ் (42). சமீபத்தில் மருத்துவமனையில் உள்ள கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த காரில் நோயாளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பிற்கு செவிலியர் பெனலோப் வில்லியம்ஸ் தான் காரணம் என்று மருத்துவமனை ஊழியர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை அவர் தெரிவித்தார்.
அதன்படி காவல்துறை அதிகாரிகள் அவரிடன் முதலில் விசாரணை நடத்தியபோது, "பார்க்கிங்கில் காரில் இருந்த நோயாளியிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்தது. அதனால் நான் அங்கு சென்று அவரை பார்த்தேன். பின்பு, காரின் பின்சீட்டில் அமர்ந்து அவருடன் சுமார் 45 நிமிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேசிக் கொண்டிருந்தபோது நோயாளிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக" அவர் வாக்குமூலம் அளித்தார். இவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால் போலீசாருக்கு சந்தேகம் இருந்தது.
சிக்கிய நர்ஸ்
இதற்கிடையில், நோயாளியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், உடலுறுவின்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக இருந்தது. மேலும், அந்த நோயாளிக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, டயாலிசிஸ் சிகிச்சை நடந்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அவர் உடலுறவு கொண்டிருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, போலீசார் மீண்டும் அந்த செவிலியரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, "சுமார் ஒரு ஆண்டாக அந்த நோயாளியிடம் நெருக்கமான உறவில் இருந்துள்ளார். இந்த விஷயம் சக ஊழியர்களுக்கு தெரிந்தும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் அந்த செவிலியர் இதனை கேட்காமல் உடலுறவில் இருந்துள்ளார்.
விசாரணையில் அம்பலம்
சம்பவத்தன்று காரில் பின் சீட்டில் நேயாளியுடன் உறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது தான் நோயாளிக்கு மாரடைப்பு வந்துள்ளது. அனால் அப்போது கூட அந்த செவிலியர் பதறாமல் ஆம்புலன்ஸை கூட அழைக்காமல் இருந்துள்ளார். பின்னர், சக பணியாளர் ஒருவரை மட்டும் உதவிக்கு அழைத்துள்ளார். அந்த பணியாளர் வந்துபோது நோயாளியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. பின்னர், சிறிது நேரத்திலேயே நோயாளி மாரடைப்பால் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்” என்று வாக்குமூலம் அளித்தார்.
இதனை அடுத்து, கடமை தவறிய செவிலியரை சம்பந்தப்பட்ட மருத்துமனை நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. பின்னர், செவிலியர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். நோயாளி என்று கூட பார்க்காமல் செவிலியர் சுமார் ஒரு வருடமாக நெருக்கமான உறவில் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)