(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: பணம் கேட்டு மிரட்டிய ஆபாசப்பட நடிகை.. மனைவி, தாயுடன் விஷம் குடித்த இளைஞர்.. வைரலாகும் வீடியோ
ஆபாச பட நடிகை மிரட்டியதால் இளைஞர் தனது மனைவி மற்றும் மகளுடன் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஆபாச பட நடிகை மிரட்டியதால் ஒரு குடும்பமே விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ளது உஜ்ஜையின். இங்குள்ள லாகுபுல் பகுதியில் வசித்து வருபவர் ஆஷிகான்.
இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்வது போல வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. விஷம் குடிப்பதற்கு முன்பு அவர் அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, “எனது பெயர் ஆஷிகான். தற்போது உஜ்ஜையினில் உள்ள லோஹிபுல்லில் வசித்து வருகிறேன். இவர் எனது மனைவி மற்றும் தாய்.
மும்பையில் உள்ள ஆபாச பட நடிகை ரிம்ஜூம்தாஸ் என்னிடம் பணம் கேட்டு மிரட்டி வருகிறார். நான் பணம் கொடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி வருகிறார். எனது திருமணத்தின்போது அவருக்கு நான் கொஞ்சம் பணம் கொடுத்தேன். தற்போது இன்னும் பணம் வேண்டும் என்று மிரட்டுகிறார்.
ஒரு முறை நான் மும்பையில் வசித்துக் கொண்டிருந்தபோது, என்னை பாலியல் வழக்கில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்பினார். தற்போது என்னை உஜ்ஜையின் சிறைக்கு மீண்டும் அனுப்ப முயற்சிக்கிறார். தற்போது தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டுகிறார். என்னால், இப்போது அவருக்கு எதுவும் கொடுக்க முடியாது. தற்போது நான் எனது குடும்பத்துடன் விஷம் குடிக்கிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
61 நொடிகள் ஓடும் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த பெண் தற்போது கவுகாத்தியைச் சேர்ந்ததாகவும், விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வரும் அவர் மும்பையில் வசித்து வருவதாகவும் அந்த பெண்ணே கூறியதாக கூறப்படுகிறது.
விஷம் குடித்து மூன்று பேரும் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உஜ்ஜையின் காரகுவா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்க: வாத்து பண்ணையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு; குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை - புதுவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மேலும் படிக்க: Accident: சபரிமலைக்கு சென்று திரும்புகையில் விபத்து: 40 அடி பள்ளத்தில் கவிழ்நத கார்; 8 பேர் பலி.!