மேலும் அறிய

Accident: சபரிமலைக்கு சென்று திரும்புகையில் விபத்து: 40 அடி பள்ளத்தில் கவிழ்நத கார்; 8 பேர் பலி.!

தேனி மாவட்ட குமுளி மலைப்பாதையில் 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

சபரிமலைக்குச் சென்று திரும்புகையில், நேற்று நள்ளிரவில்  தேனி மாவட்ட குமுளி மலைப்பாதையில் 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 2 பேர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் விவரம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. பலியானவர்கள் தேனி மாவட்ட ஆண்டிப்பட்டி பகுதிச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இது சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான ஐய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் மூலம் தேனி மாவட்டம் கம்பம் வழியாக கம்பம்மெட்டில் உள்ள  மலைச்சாலையில் சபரிமலை சென்றும், குமுளி மலைப்பாதை வழியாக தமிழ்நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், சபரிமலைக்குச்  சென்று திரும்பிய தேனி மாவட்ட ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கார் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் குமுளி மலைச்சாலையில் வேகமாக வந்த கார் பாலத்தை கடக்க முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 40அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

விபத்துக்குள்ளான காருக்கு பின் வந்துகொண்டு இருந்த வாகனத்தில் வந்தவர்கள் அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பொது மக்களுடன் மீட்புபணியில் விரைந்து ஈடுபட்டனர். தீயணைப்பு மற்றும் காவல் துறையினர்  கயிறு கட்டி கார் கவிழ்ந்த பள்ளத்தில் இறங்கி, காருக்கு அருகே சென்றனர். அப்போது படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் காருக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதில் 7 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

மேலும் பலத்த காயமடைந்த இருவரை மீட்டு கம்பத்தில் உள்ள தனியார்  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனாலும் காயத்தின் தன்மை அதிகமாக இருந்ததால் அதிகப்படியான ரத்தக் கசிவு ஏற்படவே சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது. விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 8 பேரின் உடல்களையும்  பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்கள் 8 பேர் உயிரிழந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget