Crime: 2 பட்டியலின சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை! மீட்கப்பட்ட ஒருவரின் சடலம் - பீகாரில் என்ன நடந்தது?
பீகாரில் பட்டியலின சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
பட்டியலின சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்:
இதைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்த நிலையில் தற்போது ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் பட்டியலின சிறுமிகள் இரண்டு பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக 55 வயதான தயானந்த் ராய் என்பவர் கைதாகி உள்ளார். இரண்டு சிறுமிகளும் வயல்வெளிக்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு வந்த தயானந்த் ராய், இவர்களை சிமெண்ட் கல்லால் கொடூரமாக பலமுறை அடித்திருக்கிறார். பின்னர், இரண்டு சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை:
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினர் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமி ஒருவரின் உடலை போலீசார் கண்டெடுத்தனர். இதனையடுத்து, சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
மற்றொரு சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், "2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட தயானந்த் ராய் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. சமீபத்தில் கூட, அண்டை வீட்டில் இருக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இறுதியில் அண்டை வீட்டாரையும் தாக்கியுள்ளார். மேலும், 70 வயது பெண்ணை கொலை செய்துள்ளார்" என்று தெரிவித்தனர்.
சமீபத்தில் கூட, பீகாரில் பட்டியலின பெண்ணை, போலீஸ் அதிகாரி ஒருவர் நடுரோட்டில் தடியால் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது பட்டியலின சிறுமியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
டாய்லெட்டில் இருந்து எஸ்கேப் ஆன கைதி; மனைவியுடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற போது தூக்கிய போலீஸ்
மூன்றாவதாகவும் ஆண் குழந்தை! கோபத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை - ம.பி.யில் கொடூரம்