Crime: சீர்காழி அருகே அண்ணியை அடித்து கொன்றவர் கைது
சீர்காழி அருகே குடும்ப தகராரில் அண்ணன் தம்பி இடையே ஏற்பட்ட மோதலை தடுத்த அண்ணியை அடித்து கொலை செய்த கொழுந்தனார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதுப்பட்டிணம் திரௌபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் 36 வயதான கண்ணன். இவர் தனது சகோதரர் கோபிநாதனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணனுக்கு பவுசுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான தீபலட்சுமி என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த சூழலில் சகோதரர்கள் கண்ணன் மற்றும் கோபிநாத் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி சகோதரர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளுமாக மாறி உள்ளது. அதனைக் கண்ட கண்ணன் மனைவி தீபலட்சுமி தடுத்துள்ளார். அப்போது கோபிநாதன் உதைத்ததில் தீபலட்சுமி கீழ விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Jactto - Geo : ஏப்ரல் 11-ல் கோட்டை முற்றுகை போராட்டம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனியின்றி தீபலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கோபிநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்