மேலும் அறிய
Advertisement
கள்ளக்காதலுக்கு தொல்லை என நினைத்ததால், குழந்தையை கொலை செய்த தாய் கைது !
குழந்தை சிந்து ஸ்ரீ கொலை சம்பவத்தால் அவரது தந்தை ரமேஷ் உறைந்து போனார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுரவாட்டா மாணிக்கவளசா பகுதியில் வரலட்சுமி - ரமேஷ் தம்பதியினர் வசித்துவந்தனர். 2014-இல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 'சிந்து ஸ்ரீ' என்ற மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ரமேஷ் வேலைக்காக வெளியூர் செல்வதால் வரலட்சுமி தான் வசித்த பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். அங்கு ஜெகதீஷன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்களது நெருக்கமான பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து வரலட்சுமிக்கும் அவரது கணவர் ரமேஷுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சுமார் 4 மாதம் இருவரும் தனியாக வசித்துவந்தனர். குழந்தை 'சிந்து ஸ்ரீ' வரலெட்சுமியிடம் இருந்துள்ளது. தன்னுடைய காதலுக்கு தனது குழந்தை சிந்து ஸ்ரீ தொல்லையாக இருப்பதாக வரலெட்சுமி நினைத்துள்ளார். இதனால் குழந்தையை கொலை செய்ய முடிவுசெய்த வரலெட்சுமியும் காதலன் ஜெகதீஷும் குழந்தையை கொலை செய்து சடலத்தை மதுரவாட்டா மாணிக்கவளசா பகுதி மயானத்தில் புதைத்துள்ளனர். குழந்தையின் தந்தை ரமேஷிடம் 'குழந்தை உடல் நிலை குறைவால்' இறந்துவிட்டது என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் வரலெட்சுமியும் அவரது காதலனும் சேர்ந்து கொலைசெய்தது தெரியவந்தது. இந்நிலையில் விசாரணைக்காக வரலெட்சுமியை காவல்துறையினர் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றபோது குழந்தையின் உறவினர்கள் சூழ்ந்து தாக்க முயற்சித்தனர். அதனை தொடர்ந்து வரலட்சுமியை மீட்ட காவல்துறையினர், காவல்நிலையத்தில் விசாரணை நடத்திவருகின்றனர். வரலெட்சுமி காதலனுக்காக பெற்ற குழந்தையை கொடூரமான முறையில் கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. விசாகப்பட்டினம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தை சிந்து ஸ்ரீ கொலை சம்பவத்தால் அவரது தந்தை ரமேஷ் உறைந்து போனார்.
இது குறித்து ஆந்திர காவல்துறையினர், “குழந்தை சிந்து ஸ்ரீ, கொலை செய்யப்பட்டு மயானத்தில் புதைத்து இரண்டு நாள் கழித்து தான் வரலெட்சுமி ரமேஷ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். ஃபோனில் வரலெட்சுமி நாடகமாடுவதை உணர்ந்த அவர், நேரடியாக எங்களிடம் புகார் செய்தார். இதனைத்தொடர்ந்து குழந்தையின் உடலை விசாகப்பட்டினம் மருந்துவமனைக்கு கொண்டு சென்றோம். அதற்கு முன்னதாக வரலெட்சுமி, ஜெகதீஷனை கைதுசெய்து விசாரணை நடத்தியதில் உண்மை தெரியவந்தது. இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தினோம். குழந்தையை எவ்வாறு கொலை செய்தார்கள் என்பதை தெரிந்துகொள்ள குற்றவாளிகளை அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றோம். ஆனால் பாதிக்கப்பட்ட குழந்தையின் உறவினர்கள் விசாரணை செய்ய அனுமதிக்காமல் வரலட்சுமியை தாக்க முயற்சி செய்தனர். இதனால் அங்கிருந்து குற்றவாளிகளை மீட்டு காவல்நிலையத்தில் விசாரணை நடத்துகிறோம்” என்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion