மேலும் அறிய

ஷாக்! ஆருத்ராவை தொடர்ந்து 'எல்பின்' நிதி நிறுவன மோசடியிலும் நடிகர் ஆர்.கே. சுரேஷ்க்கு தொடர்ப்பா?

"ஆருத்ரா வழக்கு தொடர்பாக நடிகர் ஆர்கே சுரேஷ் 15 கோடி ரூபாய் பேரம் பேசி வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது"

தமிழகத்தை உலுக்கிய நிதி நிறுவன மோசடிகள்

ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம், 1,09,285 முதலீட்டாளர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இந்த மோசடியில் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு துணை தலைவராக இருக்கும் ஆர்.கே.சுரேசுக்கும், பா.ஜ.கவின் நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்பிருந்த்து கண்டுபிடிக்கப்பட்டது

ஷாக்! ஆருத்ராவை தொடர்ந்து 'எல்பின்' நிதி நிறுவன மோசடியிலும் நடிகர் ஆர்.கே. சுரேஷ்க்கு தொடர்ப்பா?

நடிகர் ஆர்.கே. சுரேஷ் சிக்கியது எப்படி ? 

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆருத்ரா வழக்கில் கைது செய்யப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கைதான, ரூசோ நடிக்கும் திரைப்படத்தை ஆர்.கே. சுரேஷ் தயாரிப்பதும் சந்தேகத்தை காவல்துறையினருக்கு ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் தன்னை குட்டி பிரபலமாக நினைத்துக் கொண்டு சுற்றி திரிந்த ரூசோவிடம், விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியானது, ஆர்.கே. சுரேஷ் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், இந்த வழக்கில் இருந்து , தானும் தனது நண்பர்களும் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பதற்காக, 12 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். மேலும் , இன்னும் சில கோடிகளை செலவு செய்தால், இந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்துவிடலாம் என ஆர் .கே சுரேஷ் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ரூஸோ கைதான தகவலை அறிந்தவுடன், நடிகர் சுரேஷ், துபாய் சென்று தலைமறைவாகியுள்ளார். இந்த வழக்கில் சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பது, உறுதியாகியுள்ளதாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த வழக்கில் டான்பிட் நீதிமன்றம் எனப்படும் தமிழ்நாட்டு முதலீட்டார்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.பாபு சில நாட்களுக்கு முன்பு குற்றப்பத்திரிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர் டி.பாபு தாக்கல் செய்த 50 பக்க அளவிலான குற்றப்பத்திரிக்கையில், முதற்கட்டமாக 360 புகார்களில் தொடர்புடைய 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த கட்ட நகர்வு 

நடிகர் ஆர். கே .சுரேஷ், 15 கோடி ரூபாய் வரை பேரம் பேசி ஆருத்ரா நிதி நிறுவன முகவர்களிடமிருந்து, பணத்தை பெற்றதும் விசாரணையில் தெரிய வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த ரூசோ மிக முக்கிய காரணமாக இருந்து உள்ளதாகவும் காவல்துறையினர். தொடர்ந்து விசாரணை முடிந்தவுடன் ஒவ்வொரு கால கட்டத்திலும், குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 360 புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

எல்பின் நிறுவனத்திலும் தொடர்பாக ?

திருச்சியை தலைமை இடமாக கொண்டு எல்பின் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு கொண்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தை ராஜா என்பவர் நடத்தி வந்தார். இவரும் பல கவர்ச்சிகரமான வைத்து முதலீட்டாளிடமிருந்து பல 100 கோடி ரூபாய் முதலீடு பெற்றுள்ளார் . திருச்சி சுற்றுவட்டார மாவட்டங்கள் அண்ணா தஞ்சாவூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இயக்குனர்களின் நியமித்து தனது நிதி நிறுவனத்தின் கிளைகள் மூலம் சுமார் 962 கோடி மோசடி செய்ததாக எழுந்துள்ளது. இந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா பாஜகவில், இணைத்து பணியாற்றி வந்ததாக தெரிகிறது. இவரும் நடிகர் ஆர்.கே சுரேஷிடம் வழக்கிலிருந்து, தன்னை வழக்கில் காப்பாற்ற பணம் கொடுத்ததாக தற்பொழுது விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
"மோடியின் பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் Close செய்தவர் ராகுல் காந்தி" முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
"பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடுதான்" முப்பெரும் விழாவில் திருமாவளவன் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Vikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOSSuriya Political Entry | அரசியலில் குதிக்க ரெடி விஜயுடன் மோதும் சூர்யா?உள்ளாட்சி தேர்தலில் போட்டியா?Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
"மோடியின் பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் Close செய்தவர் ராகுல் காந்தி" முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
"பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடுதான்" முப்பெரும் விழாவில் திருமாவளவன் பேச்சு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Vijay Sethupathi :  நான் என்னை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.. வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு
நான் என்னை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.. வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு
Embed widget