வீடு புகுந்து 87 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை: நடவடிக்கை எடுக்காத போலீசார்? டெல்லியில் அதிர்ச்சி
டெல்லியில் 87 வயது மூதாட்டியை வீடு புகுந்து மர்மநபர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்குப்பதிவில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மூதாட்டியின் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேற்கு டெல்லியில் அமைந்துள்ளது திலக் நகர். இந்த பகுதியில் 87 வயதான மூதாட்டி ஒருவர் தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த 87 வயது மூதாட்டியின் மகளான 65 வயது பெண்மணி தனது தோழி ஒருவரை பார்ப்பதற்காக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வெளியில் சென்றுள்ளார். அப்போது, வீட்டில் அவரது தாயார் மட்டும் இருந்துள்ளார்.
இந்த நிலையில், அன்றைய தினம் நள்ளிரவில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த நபரிடம் யார்? என்ன விவரம்? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் தான் சிலிண்டர் ஏஜென்சியில் இருந்து வந்துள்ளதாக கூறியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த அந்த மூதாட்டி அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைக்க கத்தியுள்ளார். இதையடுத்து, அந்த நபர் அந்த மூதாட்டியை தாக்கியுள்ளார். பின்னர், மூதாட்டி என்றும் பாராமல் அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த மூதாட்டியின் செல்போனையும் திருடிக்கொண்டு அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர், வீடு திரும்பிய அந்த மூதாட்டியின் மகள் தனது தாய் காயத்துடன் கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, டெல்லி காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் இந்த வழக்கை வெறும் திருட்டு வழக்காக மட்டுமே பதிவு செய்துள்ளதாக அந்த மூதாட்டியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். பாலியல் வன்கொடுமை குறித்து அவர்கள் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறியுள்ளனர்.
மேலும் படிக்க : Chennai: அரை நிர்வாண வக்கீலின் ஸ்டார் ஓட்டல் ரகளை! விடிய விடிய மது பார்ட்டி.! பில்லுக்கு பணமில்லை.!
இதுதொடர்பாக, விளக்கம் அளித்த மேற்கு டெல்லி காவல்துறையினர் ”அவர்கள் திருட்டு வழக்காகதான் புகார் பதிவு செய்தனர். தற்போது அவர்கள் பாலியல் வன்கொடுமை என்று கூறியிருப்பதால் சில சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு சேர்க்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர். மூதாட்டிக்கு அவரது சொந்த வீட்டிலே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அவரது உறவினர்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். மூதாட்டியின் பேத்தி கனடாவில் படித்து வருகிறார் என்பதால் இந்தியாவில் மூதாட்டி அவரது மகளுடன் வசித்து வருகிறார்.
87 வயது மூதாட்டியை நள்ளிரவில் வீடு புகுந்து மர்மநபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : அடுத்தவர் மனைவியுடன் சல்லாபம் - கையும் களவுமாக கணவனிடம் சிக்கிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்