மேலும் அறிய
Advertisement
அடுத்தவர் மனைவியுடன் சல்லாபம் - கையும் களவுமாக கணவனிடம் சிக்கிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் ஏற்கனவே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோவில் சிறைக்கு சென்று பிணையில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அடுத்த திருவிடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் குமார் கூலி வேலை பார்க்கும் இவர். மனைவி விஜயஸ்ரீ மற்றும் இரண்டு மகள்களுடன் அதே வீட்டில் வசித்து வருகிறார். கூலி வேலைக்கு சென்ற குமார் கழிந்த 11 ஆம் தேதி இரவு வேலை முடித்து வீட்டிற்கு சென்ற அவர் வீட்டின் முன் கார் ஒன்று நின்றுள்ளது மேலும் அவர் வீட்டு கதவும் பூட்டப்பட்டிருந்தது.குமார் பல முறை கதவை தட்டிய போதும் மனைவி விஜயஸ்ரீ திறக்காத நிலையில் அறை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே பார்த்துள்ளார் அப்போது முன்னாள் அதிமுக எம்எல்ஏ யும் அவரது மனைவி விஜயஸ்ரீ யும் தனிமையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டு கதவை திறந்து வேகமாக வந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தகாத வார்த்தைகள் பேசியதோடு தனது கார் டிரைவர் மகேஷ் என்பவருடன் சேர்ந்து இங்கு எதற்கு வந்தாய் என கேட்டு குமாரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்ற நிலையில் காயமடைந்த குமார் சிகிட்ச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
தான் கூலி வேலை செய்து வருவதாகவும் எனது மனைவி விஜயஸ்ரீ க்கும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் என்பவருக்கும் பல வருடங்களாக தவறான உறவு இருந்து வந்ததாகவும் தான் வேலைக்கு நாகர்கோவில் சென்று விடும் நிலையில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் எனது வீட்டிற்கு வந்து செல்வார் என்றும் சம்பவத்தன்று நான் அவர்கள் தனிமையில் இருப்பதை நேரில் பார்த்ததால் ஆத்திரமடைந்து நாஞ்சில் முருகேசரும் அவரது டிரைவர் மகேஷ் ம் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இரணியில் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 3-பிரிவுகளின் கீழ் நாஞ்சில் முருகேசன் மற்றும் அவரது கார் டிரைவர் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர். நாஞ்சில் முருகேசன் ஏற்கனவே 16-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்று பிணையில் வெளிவந்த நிலையில் தற்போது அஇஅதிமுக சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வேட்பாளராக தனது மகளை களமிறக்கு தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் மேலும் ஒரு பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கியிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
சென்னை
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion