இருசக்கர வாகனத்தில் ட்ரிபிள்ஸ் சென்ற கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
’’முன்னால் சென்ற லாரியை, இளையபெருமாள் முந்தி செல்ல முயன்றுள்ளார் . அப்போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி இளையபெருமாள் கட்டுப்பாட்டை இழந்து நடு சாலையில் கவிழ்ந்தது’’
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி பகுதியை சேர்ந்தவர் இளையபெருமாள் (18), சக்திவேல் (18), குமார் (18). இவர்கள் மூவரும் நேற்று மாலை கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை இளையபெருமாள் ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து சூளகிரியில் தனியார் பள்ளி எதிரே மேம்பாலம் பகுதியில் முன்னால் சென்ற லாரியை, இளையபெருமாள் முந்தி செல்ல முயன்றுள்ளார் . அப்போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி இளையபெருமாள் கட்டுப்பாட்டை இழந்து நடு சாலையில் கவிழ்ந்தது. இந்த வாகனத்தில் பயணம் செய்த இளையபெருமாள், சக்திவேல், மற்றும் குமார் ஆகியோர் வந்துகொண்டிருந்த லாரியின் அடியில் மூன்று நபர்களும் சிக்கினர். இந்த சம்பவம் கண் இமைக்கும் நேரத்தில் லாரி சக்கரம் அவர்கள் மீது ஏறியது. இதில் நண்பர்கள் 3 நபர்களும் உடல் நசுங்கி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தால் மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை விமான நிலையத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
Udaya nagar: அண்ணா நகர்... கலைஞர் நகர்... வரிசையில் உதயமானது உதயா நகர்!
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் சூளகிரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் காவல்துறையினர் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இளையபெருமாள், சக்திவேல்,மற்றும் குமார் ஆகியோரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து சூளகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சூளகிரியில் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உள்பட 3 நபர்களும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
‛அறிவிக்கும் போது தெரியாதா? கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது’ -நகைக் கடன் குறித்து ஓபிஎஸ் சாடல்!
வாகனம் ஓட்டும் முறைகள்:
இருசக்கர வாகனத்தை ஓட்டும் போது ஹெல்மட் அணிவது அவசியம். இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் பயணம் செய்யகூடாது. வாகனம் ஓட்டும் போது உங்களுக்கு முன்பு, பின்பு, வலது, இடது புறங்களில் வரும் வாகனத்தைக் கவனித்துக் கொண்டே வாகனத்தை ஓட்டுங்கள். வாகனம் ஓட்டும்போது பாட்டு கேட்டுக்கொண்டு செல்வது, ஹெட்ஃபோன் மூலம் பேசிக்கொண்டே செல்வதை அறவே தவிர்க்க வேண்டும். மஞ்சள் கோட்டைத் தாண்டி வாகனத்தை ஓட்டக்கூடாது. வளைவுகளில் முன் செல்லும் வண்டியை முந்தக்கூடாது. மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றினால் விபத்து நடைபெறுவதை தவிர்க்கலாம்