(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: திருச்சி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை
திருச்சி மாவட்டத்தில் வெவ்வெறு சம்பவங்களில் 2 பெண்கள் உட்பட 3 பேர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர்.
திருச்சி மாவட்டம் ,திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் ரகுமான் (எ)சக்தி லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார் . இவர் கோகிலா (வயது 22) என்ற இளம் பெண்ணை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாய் சஷ்டிகா என்ற ஒரு பெண் குழந்தையும், சாய் சர்வேஸ் என்ற 7 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது கோகிலா தூக்கிட்டு உள்ளார். அப்போது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றார். அங்கு செல்வதற்குள் கோகிலா தூக்கில் தொங்கி உள்ளார். உடனடியாக பாலமுருகன் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார். அங்கு மருத்துவர்கள் பரி சோதனை செய்த போது கோகிலா ஏற்கனவே இறந்தது விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோகிலாவுக்கு திருமணமாகி 2 1/2 ஆண்டுகளே ஆவதால் திருச்சி ஆர்.டி.ஓ. மேல் விசாரணை மேற்கொண்டு உள்ளார்.
இதேபோன்று திருவாரூர் மாவட்டம் குடவாசல் அபி விருத்தீஸ்வரர் பகுதியை சேர்ந்தவர் ஷகிருதீன் (வயது 73). இவரது மகள் ஜாக்கின் பர்வீன் (39). இவர் கணவனை பிரிந்து மகனுடன் தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் பர்வீனுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் திருச்சி ஆத்மா மனநல மையத்தில் சிகிச்சை எடுப்பதற்காக தன்னுடைய சகோதரியின் வீட்டில் வந்து தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனிடையே கடந்த 30ம் தேதி மாலை 7 மணி அளவில் நத்தர்ஷா பள்ளிவாசலுக்கு வந்து எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அடுத்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று திருச்சி வரகனேரி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி(வயது 56) இவரது மகன் விஜயகுமார் (39) திருமணம் ஆகாதவர். இவர் நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்த நிலையில், தொடர்ந்து வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர் நேற்று முன் தினம் வீட்டில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காந்தி மார்க்கெட் காவல் துறையினர் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்