கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு - யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் - நீதிமன்றம் அதிரடி
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு - யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் - நீதிமன்றம் அதிரடி

பொறியியல் பட்டதாரி கொகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. 5 பேர் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனை விவரங்கள் வரும் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING | கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் - மதுரை சிறப்பு நீதிமன்றம் https://t.co/wupaoCQKa2 | #GokulrajMurderCase #Gukulraj pic.twitter.com/ZiVrVK4uwj
— ABP Nadu (@abpnadu) March 5, 2022
அதில், யுவராஜ், அருண் செந்தில், அருண் குமார், சங்கர், செல்வக்குமார் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கான தண்டனை விவரங்களும் வரும் 8ஆம் தேதி வெளியிடப்படும் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, பின்னர் மதுரை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















