பெயரில் தங்கம் செய்ததோ பங்கம்... பீகார்-மதுரைக்கு கஞ்சா சேவை செய்த ஆம்னி பஸ்!
மதுரைக்கு தினசரி பயண சேவையாற்றும் தங்கம் என்கிற ஆம்னி பஸ்சில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது, டிரைவரை சிக்க வைத்து கிளீனர் தப்பியோட்டம்!
மதுரைக்கு ஆம்னி பேருந்தில் கடத்தப்பட்ட 65 கிலோ கஞ்சா பறிமுதல்
சொகுசுப் பேருந்தில் கடத்தப்பட்டரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து மது கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் கொரோனா பரவல் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆம்னி பேருந்தில் கடத்தி செல்லப்பட்ட 65 கிலோ கஞ்சா மற்றும் 15 மதுபுட்டிகள் இருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூா் வட்டம், ஞானோதயம் கிராமத்தில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் வளத்தி காவல் நிலைய உதவி ஆய்வாளா் தேவேந்திரன், காவலா்கள் கார்த்திக், யுவராஜ், மணிகண்டன் ஆகியோர்வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த தனியார் சொகுசுப் பேருந்து சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றது.
போலீசார் பின் தொடர்ந்து விரட்டுவதை கண்ட பேருந்தில் இருந்து இருவர் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர். மேலும் செல்லும் வழியில் இரு இடங்களில் சில பைகளை வெளியே வீசினர். இதனை கண்ட போலீசார் அதனை கைப்பற்றி எடுத்து பார்த்த போது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பேருந்தை சினிமா பாணியில் வேகமாக விரட்டிய போலீசார், வளத்தி அருகே சந்தபேட்டை என்ற இடத்தில் பேருந்தை மடக்கி பிடித்தனர். பேருந்திலிருந்து இருவா் தப்பியோடினா் அவா்களைப் பிடிக்க முயன்ற போது, காவலா் யுவராஜுக்கு காயமேற்பட்டது. பேருந்து ஓட்டுநரான மதுரை திருநகரை சோ்ந்த பாண்டியன் மகன் நடராஜை (39) பிடித்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினா். இதில் மொத்தம் 65 கிலோ எடையிலான 29 கஞ்சா பொட்டலங்களை பிகாரிலிருந்து மதுரைக்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது. அவற்றுடன் 15 மதுப்புட்டிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனா். மேலும், பேருந்தை வளத்தி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். தப்பியோடி கிளீனா் அருண், அவரது நண்பரை போலீஸார் தேடி வருகின்றனா்.
தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன், செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினா். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது. இதே போன்று கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள எரிச்சாராயம், ஏழு லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா உள்ளிட்டவற்றை வளத்தி காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. டாஸ்மாக் சரக்கு கிடைக்காத குடிமகன்களுக்கு எந்த வகையிலாவது போதை ஏற உதவி செய்ய வேண்டும். அதைப்போல் அதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கள்ள மது பாட்டில்களும், குட்கா போன்ற போதை ஏறும் புகையிலைப் பொருட்களும் தமிழகத்தில் மிக வேகமாக ஊடுருவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.