மேலும் அறிய

Marriage Assistance Schemes: உங்களுக்கு திருமணமா? உதவிகளை வாரி வழங்கும் தமிழக அரசு - 5 திட்டங்களின் விவரங்கள்

Marriage Assistance Schemes: திருமணத்தின்போது உதவும் வகையில் மகளிருக்காக தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Marriage Assistance Schemes: திருமணத்தின்போது உதவும் வகையில் மகளிருக்காக தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும், 5 நலத்திட்டங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

திருமணத்திற்கான அரசின் உதவிகள்: 

பெரும்பாலான திருமணங்களில் பெண்களுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட, தாலி அணிவது ஒரு கலாச்சாரமாக உள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள்,  திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையிலும், பெண் கல்வியை ஊக்குவிக்கவும், அரசாங்கத்தால் திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் ஏழைப் பெற்றோரின் மகள்கள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் விதவைகள், விதவையின் மகள் திருமணம் மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு உதவும் வகையில் ஐந்து திருமண உதவித் திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகின்றன.

திட்டம்-I தகுதிகள்:

கல்வித் தகுதி: மணமகள் 10 ஆம்  வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மணமகள் பட்டியல் பழங்குடியினராக இருந்தால் V வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.

ரொக்க உதவி: 8 கிராம் தங்க நாணயத்துடன், ரூ.25,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்

 திட்டம்-II தகுதிகள்:

கல்வித் தகுதி: தினசரி கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள், தொலைதூரக் கல்வி / அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள் தகுதியுடையவர்களாவர். டிப்ளமோ படித்தவர்களானால் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பண உதவி: 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.50,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்

அரசின் நிதி உதவி திட்டங்கள்:

1. மூவலூர் ராமமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம்

2022-23 ஆம் ஆண்டு முதல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்,  மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை படித்து, கல்லூரிகளில் தினசரி படிப்பின் மூலம் உயர்கல்விக்காகச் சேர்ந்த அனைத்துப் பெண்களும் பட்டப்படிப்பை முடிக்கும் வரை மாதம் ரூ.1,000/- பெறத் தகுதி பெறுகின்றனர்.

 2. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம்

இந்த திட்டத்தின் கீழ், ரொக்கமாக ரூ.15,000 நிதியுதவி, தேசிய சேமிப்புச் சான்றிதழாக ரூ.10,000 மற்றும் 8 கிராம் எடயிலான 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற வருமான உச்சவரம்பு மற்றும் கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பட்டம் / டிப்ளமோ பெற்றவர்களுக்கு 50,000 வழங்கப்படுகிறது. அதில் 30,000 ரொக்கமாகவும், ரூ.20,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும்,  8 கிராம் எடையிலான 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.

 3. ஈவிஆர் மணியம்மையார் நினைவு விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம்

இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு ரூ.25,000 நிதியுதவி மற்றும் 8 கிராம் எடையிலான 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. பயனாளர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். பயனாளி பட்டதரியாக இருந்தால் ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம்  வழங்கப்படுகிறது.

 4. அன்னை தெரசா நினைவு அனாதை பெண்களுக்கான திருமண உதவித் திட்டம்

இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற வருமான உச்சவரம்பு மற்றும் கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு 8 கிராம் எடையிலான 22 காரட் தங்க நாணயத்துடன் ரூ.25,000 நிதியுதவியும், பட்டதாரிகளுக்கு ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.

 5. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு சாதி மறுப்பு திருமண உதவித் திட்டம்

மணமகள் 10 ம்  வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால்,  இத்திட்டத்தின் கீழ் ரூ.25,000 ரொக்க உதவி வழங்கப்படுகிறது, இதில் ரூ.15,000 ரொக்கமாகவும், ரூ.10,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் எடையிலான 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. பயனாளி பட்டம் / டிப்ளமோ பெற்றிருந்தால் ரூ.30,000 இசிஎஸ் ரொக்கம், ரூ.20,000 தேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும் 8 கிராம் எடையிலான  22 காரட் தங்க நாணயத்தை பெறுவார்கள். இந்த திட்டத்தில் வருமான உச்சவரம்பு மற்றும் குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

சாதிமறுப்பு திருமணத்தின் வகைகள்

வகை – I : சாதிமறுப்பு திருமணம் செய்த தம்பதியில் யாரேனும் ஒருவர் பட்டியலின அல்லது பட்டியலின பழங்குடியினராக இருக்க வேண்டும், மற்றொருவர் வேறு எந்த சமூகத்தயும் சேர்ந்தவராக இருக்கலாம்.

வகை – II: வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் முன்னேறிய அல்லது ரிசர்வ் செய்யப்படாத சமூகத்தைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC யைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
Embed widget