மேலும் அறிய

முகேஷ் டூ மஸ்க்: உலகின் டாப் 7 பில்லியனர்கள் தங்கள் தொழிலை எப்படி தொடங்கினர்? - விவரங்கள் இதோ...

உலகின் டாப் 7 பில்லியனர்கள் தங்கள் வாழ்க்கையை எந்தத் தொழிலில் எவ்வாறு தொடங்கினர் என்பது குறித்த தகவல்களை இங்கே வெளியிட்டுள்ளோம்... 

நம்மில் பலரும் பில்லியனர் ஆக வேண்டும் என்ற கனவுகளைக் கொண்டிருப்போம். பில்லியனராக ஆவதன் மூலமாக உலகத்தைச் சுற்றிப் பார்க்க முடியும்; சொகுசு விடுதிகளில் விடுமுறைகளைக் கழிக்க முடியும். விருப்பப்படும் எதையும் வாங்க முடியும், சொகுசு வாகனங்களை இயக்க முடியும், தனியார் படகு, விமானம் ஆகியவற்றையும் சொந்தமாக வைத்துக் கொள்ள முடியும். 

உலகில் அதிக சொத்து மதிப்பு கொண்டிருக்கும் செல்வந்தர்களின் வாழ்க்கை குறித்து நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். இது பலருக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. மேலும், பல்வேறு செல்வந்தர்கள் ஒரே இரவில் இவ்வாறு இல்லாமல், பல ஆண்டுகள் கடினப் பணிகளுக்குப் பிறகு, இந்த இடத்தை எட்டியுள்ளனர். 

நடுத்தர குடும்பங்களில் பிறந்து வெற்றி பெற்ற பெரும்பாலானோர் இன்றைய பில்லியனர்களாக இருக்கின்றனர். சிலர் பணக்கார குடும்பங்களில் பிறந்திருந்தாலும், சாதாரண பணிகளின் மூலமாக வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். பில்லியனர் குடும்பங்களிலேயே பிறந்த பலரும் கடும் கடினங்களுக்குப் பிறகு இந்த இடத்தைப் பிடித்துள்ளனர். 

உலகின் டாப் 7 பில்லியனர்கள் தங்கள் வாழ்க்கையை எந்தத் தொழிலில் எவ்வாறு தொடங்கினர் என்பது குறித்த தகவல்களை இங்கே வெளியிட்டுள்ளோம்... 

1. எலான் மஸ்க்

முகேஷ் டூ மஸ்க்: உலகின் டாப் 7 பில்லியனர்கள் தங்கள் தொழிலை எப்படி தொடங்கினர்? - விவரங்கள் இதோ...

தற்போது சுமார் 246 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்போடு, உலகிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்டவராக இருக்கிறார் எலான் மஸ்க். அவரின் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் அவரது சொத்து மதிப்பில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. சமீபத்தில் ட்விட்டர் தளத்தை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. 

எலான் மஸ்க் இந்த நிலைக்கு வருவதற்கு முன்பு, வயல் வேலைகள், மரம் அறுக்கும் ஆலை முதலானவற்றில் பணியாற்றினார். கடந்த 1989ஆம் ஆண்டு, கனடாவில் தனது உறவினரோடு வாழ்ந்து பணியாற்றி வந்தவர் எலான் மஸ்க். 

2. பெர்னார்ட் அர்னால்ட்

முகேஷ் டூ மஸ்க்: உலகின் டாப் 7 பில்லியனர்கள் தங்கள் தொழிலை எப்படி தொடங்கினர்? - விவரங்கள் இதோ...

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர், முதலீட்டாளர், கலைப்பொருள்கள் சேகரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் பெர்னார்ட் அர்னால்ட்.   LVMH Mot Hennessy – Louis Vuitton SE என்ற உலகின் மிகப்பெரிய சொகுசுப் பொருள்கள் விற்பனை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் இவரின் மொத்த சொத்து மதிப்பு, 156 பில்லியன் அமெரிக்க டாலர்கள். மேலும், இவர் உலகின் இரண்டாவது பணக்காரராகவும் கருதப்படுகிறார். 

தன் தந்தையின் நிறுவனம் Ferret-Savinellலில் தனது தொழில் வாழ்க்கையை 1971ஆம் ஆண்டு தொடங்கினார் பெர்னார்ட் அர்னால்ட். கடந்த 1978 முதல் 1984 வரை, அந்த நிறுவனத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றினார். 

3. ஜெஃப் பெசோஸ்

முகேஷ் டூ மஸ்க்: உலகின் டாப் 7 பில்லியனர்கள் தங்கள் தொழிலை எப்படி தொடங்கினர்? - விவரங்கள் இதோ...

அமேசான் நிறுவனரும், நிர்வாக இயக்குநரும், முன்னாள் அதிபரும், தற்போது அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கும் ஜெஃப் பெசோஸ், சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளுடன் உலகின் மூன்றாவது பில்லியனர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 

ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து தனது பட்டப்படிப்பை முடித்தவுடன், இண்டெல், பெல் லேப்ஸ், ஏண்டர்சன் முதலான நிறுவனங்களில் ஜெஃப் பெசோஸுக்கு வேலை வழங்கப்பட்டது. எனினும், பொருளாதார டெலிகாம் நிறுவனமான ஃபிடெல் நிறுவனத்தில் தனது முதல் பணியைத் தொடங்கினார் ஜெஃப் பெசோஸ். 

4. பில் கேட்ஸ்

முகேஷ் டூ மஸ்க்: உலகின் டாப் 7 பில்லியனர்கள் தங்கள் தொழிலை எப்படி தொடங்கினர்? - விவரங்கள் இதோ...

கல்லூரிப் படிப்பை முடிக்காமல், தற்போது சுமார் 129 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகளோடு உலகின் அதிக பணம் கொண்டவர்களின் பட்டியலில் இடம்பெறுகிறார் பில் கேட்ஸ். கடந்த 1975ஆம் ஆண்டு, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைத் தொடங்கிய பில் கேட்ஸ், அதன் மூலம் தற்போதைய இடத்தை அடைந்துள்ளார். எனினும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு வரை, தனது பள்ளிக்கால நண்பர் பால் ஏலனுடன் ஹனிவெல் நிறுவனத்தில் கடந்த 1974ஆம் ஆண்டு பணியாற்றினார் பில் கேட்ஸ். 

5. கௌதம் அதானி

முகேஷ் டூ மஸ்க்: உலகின் டாப் 7 பில்லியனர்கள் தங்கள் தொழிலை எப்படி தொடங்கினர்? - விவரங்கள் இதோ...

இந்தியாவிலேயே அதிக பணம் கொண்டவரும், உலகின் ஐந்தாவது பணக்காரருமான கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 125 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். கடந்த 1978ஆம் ஆண்டு, மும்பைக்கு மஹிந்திரா சகோதரர்களுக்காக வைர வியாபாரம் செய்வதற்கு வந்த அதானிக்கு, அதுவே முதல் வேலைவாய்ப்பு!

6. வாரன் பஃபெட்

முகேஷ் டூ மஸ்க்: உலகின் டாப் 7 பில்லியனர்கள் தங்கள் தொழிலை எப்படி தொடங்கினர்? - விவரங்கள் இதோ...

பெர்க்‌ஷைர் ஹேதவே நிறுவனத்தின் தலைவரான வாரென் பஃபெட், சுமார் 116 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புகளைக் கொண்டுள்ளார். கடந்த 1951 முதல் 1954ஆம் ஆண்டு வரை, Buffett-Falk & Co நிறுவனத்தில் முதலீட்டு விற்பனையாளராக பணியாற்றினார் வாரன் பஃபெட். 

7. முகேஷ் அம்பானி

முகேஷ் டூ மஸ்க்: உலகின் டாப் 7 பில்லியனர்கள் தங்கள் தொழிலை எப்படி தொடங்கினர்? - விவரங்கள் இதோ...

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், அதிக முதலீடுகளையும் மேற்கொண்டிருப்பவருமான முகேஷ் அம்பானி சுமார் 105 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புகளைக் கொண்டிருப்பதோடு, இந்தியாவின் இரண்டாவது அதிக சொத்து மதிப்பு கொண்டவராக இருக்கிறார். கடந்த 1980ஆம் ஆண்டு ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து படிப்பைக் கைவிட்ட முகேஷ் அம்பானி, தன் தந்தை திருபாய் அம்பானியுடன் குடும்ப வியாபாரத்தில் இருந்து தனது கரியரைத் தொடங்கியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; பள்ளிக் கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; பள்ளிக் கல்வித்துறை அதிரடி
TVK Party: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
Deepa Shankar: அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rajinikanth on Vijayakanth | விஜயகாந்த் மாதிரி ஒருத்தர்.. CHANCE-ஏ இல்ல! ரஜினி உருக்கம்Red Pix Apologize | ”சவுக்கின் கருத்தில் உடன்பாடில்லை.. மன்னிச்சிடுங்க”Savukku Shankar | கையை பிடித்து முறுக்கி.. வலி தாங்க முடியாத சவுக்கு ADVOCATE பகீர் தகவல்Savukku Shankar | ’’செல்போன் நம்பர் கேட்டாரு!’’பெண் காவலர் பகீர் புகார்! அடுத்த சிக்கலில் சவுக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; பள்ளிக் கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; பள்ளிக் கல்வித்துறை அதிரடி
TVK Party: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
Deepa Shankar: அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
12th Supplementary Exam: கவலை வேண்டாம், கல்லூரியில் சேரலாம்; பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
12th Supplementary Exam: கவலை வேண்டாம், கல்லூரியில் சேரலாம்; பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Palani Murugan Temple: பழனி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பழனி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Sunil Chhetri Retirement: அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
Embed widget