ரூ.1 லட்சம் கோடி இழப்பு: செம்ம அடிவாங்கிய ரிலையன்ஸ்.!
Share Market: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு ரூ.74,563.37 கோடி குறைந்து ரூ.17,37,556.68 கோடியாக உள்ளது
கடந்த ஒரு வாரத்தில் , பங்குச் சந்தையில் மதிப்புமிக்க டாப் 10 நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளன.
சரிந்த பங்குச் சந்தை:
இந்திய பங்குச் சந்தையில் டாப்-10 மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஆறு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பானது, கடந்த வாரம் ரூ.1,55,721.12 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) ஆகியவை சந்தை மதிப்பீட்டில் சரிவைச் சந்தித்தாலும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை ஏற்றம் கண்டுள்ளன.
ரிலையன்ஸ்:
இதில், அதிகபட்ச இழப்பை சந்தித்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு, ரூ.74,563.37 கோடி குறைந்து ரூ.17,37,556.68 கோடியாக உள்ளது. பார்தி ஏர்டெல்லின் மதிப்பு ரூ.26,274.75 கோடி குறைந்து ரூ.8,94,024.60 கோடியாக உள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ.22,254.79 கோடி சரிந்து ரூ.8,88,432.06 கோடியாகவும், ஐடிசியின் மதிப்பு ரூ.15,449.47 கோடி குறைந்து ரூ.5,98,213.49 கோடியாகவும் உள்ளது.
எல்ஐசியின் சந்தை மூலதனம் (எம்கேப்) ரூ.9,930.25 கோடி குறைந்து ரூ.5,78,579.16 கோடியாகவும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் ரூ.7,248.49 கோடி குறைந்து ரூ.5,89,160.01 கோடியாகவும் உள்ளது.
ஏற்றம் கண்ட நிறுவனங்கள்:
இருப்பினும், டிசிஎஸ் மதிப்பு ரூ.57,744.68 கோடி உயர்ந்து ரூ.14,99,697.28 கோடியாக உள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.28,838.95 கோடி உயர்ந்து ரூ.7,60,281.13 கோடியாகவும், பாரத ஸ்டேட் வங்கியின் மதிப்பு ரூ.19,812.65 கோடி உயர்ந்து ரூ.7,52,568.58 கோடியாகவும் இருந்தது.
HDFC வங்கி ரூ.14,678.09 கோடி அதிகரித்து, அதன் மதிப்பை ரூ.13,40,754.74 கோடியாக உள்ளது
இருப்பினும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக நீடித்து வருகிறது. அதனை தொடர்ந்து TCS, HDFC வங்கி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், பாரத ஸ்டேட் வங்கி, ஐடிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் எல்ஐசி ஆகியவை உள்ளன.