TataNeu: விரைவில் வருகிறது டாடா சூப்பர் ஆப் `Tata Neu’
சூப்பர் ஆப் என்பது பல வகையான செயலிகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து சூப்பர் ஆப்-ஆக கொண்டு வரவேண்டும் என்னும் ஐடியாவை 2010-ம் ஆண்டு பிளாக்பெரி நிறுவனர் பேசினார்.
டாடா குழுமம் பெரு நிறுவனங்களுடன் மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு வைத்திருக்கிறது. அதனால் 2 டாடா குழுமத்தில் உள்ள அனைத்து முக்கியமான சேவைகளையும் ஒன்றிணைந்து சூப்பர் ஆப்-னை டாடா குழுமம் கடந்த பல மாதங்களாக வடிவமைத்து வருகிறது. தற்போது சோதனை ஓட்டத்தில் இருக்கும் இந்த செயலில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
இதுவரை சூப்பர் ஆப் என்று மட்டுமே அழைக்கப்பட்டது. அதற்கான பெயர் Tata Neu என தெரியவந்திருக்கிறது.
பிக்பாஸ்க்ட, 1எம்ஜி, குரோமா, தாஜ் ஓட்டல்ஸ், டைட்டன், தனிஷ்க், ஏர் ஏசியா, விஸ்தாரா, க்ளிக், ஸ்டார்பக்ஸ், நிதி சேவைகள், காப்பீடு, வாகனங்கள், கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (காபி,டி, உப்பு) என பல பொருட்கள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு டாடா குழுமம் வழங்கி வருகிறது. தற்போது டாடா குழுமத்தில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் டாடா பணியாளர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பொருட்களை வாங்குவதன் மூலம் லாயல்டி புள்ளிகள் கிடைக்கும். அந்த லாயல்டி புள்ளிகளை வைத்து டாடா குழுமத்தின் எந்த பொருட்களை வாங்குவதற்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது போல வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
ஒவ்வொரு பிராண்டுக்கும் பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த அனைத்து வாடிக்கையாளர்களையும் ஒன்றாக்கும்போது, மேலும் பெரிய நெட்வோர்க்காக மாறும் என டாடா குழுமம் கருதுகிறது.
சூப்பர் ஆப் என்பது பல வகையான செயலிகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து சூப்பர் ஆப்-ஆக கொண்டு வரவேண்டும் என்னும் ஐடியாவை 2010-ம் ஆண்டு பிளாக்பெரி நிறுவனர் பேசினார்.
இந்தியாவில் முதன் முதலாக டாடா குழுமத்தின் சூப்பர் ஆப் வெளியாகும் என தெரிகிறது. பேங்க் ஆப் அமெரிக்காவின் கருத்துபடி இந்தியாவில் 3 முதல் 4 வரையிலான சூப்பர் ஆப்கள் அடுத்த சில ஆண்டுகளில் வெளியாகும் என கணித்திருக்கிறது.
சீனாவில் இதுபோன்ற சில சூப்பர் ஆப்கள் ( வீ சாட், அலிபே) உள்ளன. டாடா குழுமம் கிட்டத்தட்ட இரு ஆண்டுகளாக டாடா குழுமம் திட்டமிட்டுவருகிறது. ஆனால் பல முறை இதுவரை இந்த திட்டம் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. ஆரம்ப மார்ச் மாதத்தில் பிக் பாஸ்கட் உள்ளிட்ட நிறுவனங்களை கையகப்படுத்தியதற்கான சிசிஐ அனுமதி கிடைக்கவில்லை என்பதால் தாமதம் ஏற்பட்டது.
தற்போது இ-காமர்ஸ் விதிமுறைகளில் உள்ள சிக்கல் காரணமாக வெளியீடு தாமதம் ஆகிவருகிறது. இ-காமர்ஸ் விதிமுறையில் தயாரிப்பு நிறுவனங்களே விற்பனை நிறுவனங்களாக மாறுவதில் சிக்கல் உள்ளன. இதனால் காலதாமதம் ஏற்பட்டுவருகிறது.
இத்தனை காலமாக சூப்பர் ஆப் என்னும் பெயர் மட்டுமே கூறப்பட்டுவந்த நிலையில் டாடா neu என்னும் பெயரை அறிமுகம் செய்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என தெரிகிறது. டாடா மட்டுமல்லாமல், ரிலையன்ஸ், அதானி குழுமங்களும் சூப்பர் ஆப் வெளியிடும் முயற்சியில் உள்ளன.
இந்தியாவின் பொருட்கள் மற்றும் சேவையை வாங்குவதில் செயலிகளின் பங்கு முக்கியமானது. தற்போது சூப்பர் ஆப்கள் என்ன மாதிரியாக தாக்கத்தை ஏற்படுத்தும்?