Stock Market Update: சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 800 புள்ளிகள் வரை வீழ்ச்சி..!
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் முடிந்துள்ளது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி முடிந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து இன்று காலை தொடங்கிய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை:
வர்த்த நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 791. 30 அல்லது 1.17% புள்ளிகள் சரிந்து 66,811.09 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 229.95 அல்லது 1.14 % புள்ளிகள் சரிந்து 19,904.35 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
வர்த்தக நேர தொடக்கத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 628.38 அல்லது 0.92% புள்ளிகள் சரிந்து 66,980.87 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 177.30 அல்லது 0.87 % புள்ளிகள் உயர்ந்து 19,956.85 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, கோல் இந்தியா, பவர்கிரிட் கார்ப், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, ஐ.டி.சி., சிப்ளா, எம். & எம்., ஓ.என்.ஜி.சி., ஹீரோ மோட்டர்கார்ப்உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, அப்பல்லோ மருத்துவமனை, ஜெ.எஸ்.டபுள்யு., பிரிட்டானியா, ரியலைன்ஸ், ஜியோ ஃபினான்சியல், மாருது சுசூகி, கோடாக் மகிந்திரா, டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், க்ரேசியம், பாரதி ஏர்டெல், ஈச்சர் மோட்டர்ஸ், அதானி எண்டர்பிரிசிஸ், இன்ஃபோசிஸ், லார்சன், எஸ்.பி.ஐ., அதனை போர்ட்ஸ், டைட்டன் கம்பெனி, விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்க்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. 1.34% அளவுக்கு நிஃப்டி சரிந்தது.
இந்தியா- கனடா இடையே பதற்றம் தொடர்வது இந்திய பங்குச்சந்தையை மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தது உள்ளூர் மார்க்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு 82.80 - 83.60 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி இரண்டு வாரங்களுக்கு பிறகு கடும் சரிவை சந்தித்துள்ளது. செக்சென்ஸ் 800 புள்ளிகள் வரையும் நிஃப்டி 200 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்,.சி. வங்கி பங்குகளின் மதிப்பு கடும் சரிவடைந்தது சென்செக்ஸ் வீழ்ச்சிய காரணம் என கூறப்படுகிறது. 4% பங்குகளின் மதிப்பு குறைந்திருப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்பு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.1,237 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்றதும் பங்குச்சந்தை இன்றைக்கு வீழ்ச்சியடைந்ததற்கு காரணம். இந்திய ரூபாய்யின் மதிப்பு 6 பைசா அதிகரித்து 83.26 ஆக இருந்தது.
மேலும் வாசிக்க.
”கனடாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருங்கள்" - வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!