Stock Market: உயர்வுடன் வர்த்தகமான ஐ.டி., ஆட்டோ துறைகள் - ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!
Stock Market Today: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளில் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை நிலவரம்:
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 443.46 அல்லது 0.56% புள்ளிகள் உயர்ந்து 79,476.19. ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 131.35அல்லது 0.55% புள்ளிகள் உயர்ந்து 24,141.95 ஆக வர்த்தகமானது.
வாரத்தின் முதல் நாளில் வர்த்த நேர தொடக்கத்தில் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கிய இந்திய பங்குச்சந்தை சற்று நேரத்தில் ஏற்றம் கண்டனம். நிஃப்டி வெள்ளிக்கிழமை வர்த்த நேரத்தின் சாதனையை முறியடித்து புதிய உச்சத்தை தொட்டது. ஐ.டி., நிதித்துறை, மெட்டல்ஸ் ஆகிய துறைகள் சொல்லும்படியான லாபத்தை பதிவு செய்திருந்தது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் 1.5% உயர்வை பதிவு செய்தது. கடந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகியது. சென்செக்ஸ் 79 ஆயிரம் புள்ளிகளை கடந்து வரலாற்று சாதனை படைத்தது. தொடர்ந்து நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளிலும் சென்செக்ஸ் 79 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது.
Nifty50 டெக் மஹிந்திரா 2.98%, விப்ரோ 2.40%, பஜாஜ் ஃபினான்ஸ் 2.06%, க்ரேசியன் இண்டஸ்ட்ரீஸ் 2.04% அல்ட்ராடெக் சிமெண்ட் 1.99% உயர்வை பதிவு செய்துள்ளது.FMCG 0.70% ஐ.டி. 1.97%, நிஃப்டி மீடியா 2.42% என லாபத்தை பதிவு செய்தது.
டாடா மோட்டர்ஸ் ஜூன் மாத உள்நாட்டு வர்த்தகம் 8% சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இதே மாதம் 80, 383 கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், இந்த ஜூன் மாதத்தில் 74,147 கார்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாபம் - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
டெக் மஹிந்திரா, விப்ரோ, பஜாஜ் ஃபினான்ஸ், க்ரேசியம். அல்ட்ராடெக் சிமெண்ட், டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், ஜெ.எஸ்.டபுள்யு., ஹெச்.யு.எல்., டாடா மோட்டர்ஸ், எல்.டி.ஐ. மைண்ட்ரீ, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.சி., பாரதி ஏர்ஃப்ர்ல், டைட்டம் கம்பெனி, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, நெஸ்லே, மாருதி சுசூகி, ஏசியன் பெயின்ட்ஸ், கொல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, கோடாக் மஹிந்திரா, டிவிஸ் லேப்ஸ், டாடா ஸ்டீல், பிரிட்டானியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
என்.டி.பி.சி., எஸ்.பி.ஐ., ஈச்சர் மோட்டர்ஸ், டாக்டர் ரெட்ட்டி லேப்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, லார்சன், ஹிண்டால்கோ, பஜாஜ் ஃபின்சர்வ்,ஓ. என். ஜி.சி.,ம் ரிலையன்ஸ், டாடா கான்ஸ் ப்ராட், ஆக்ஸிஸ் வங்க்ஜி, அதானி போர்ட்ஸ், சிலா, சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.44 ஆக உள்ளது. இந்த வாரம் பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பாத்துள்ளனர்.