Stock Market Update: சரிவில் இருந்து மீண்டது இந்திய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை உயர்வு!
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. தொட்டக்கத்தில் சரிவுடன் இருந்த பங்குச்சந்தை கொஞ்சம் நேரத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்தது. நிஃப்டி 20 புள்ளிகள் உயர்ந்தது. இரண்டு நாள்கள் தொடர் வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்றத்துடன் வர்த்தகம் ஆனது.
பங்குச்சந்தை:
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 101.91 அல்லது 0.15% புள்ளிகள் உயர்ந்து 66,332.59 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 20.90 அல்லது 0.11 % புள்ளிகள் உயர்ந்து 19,763.60 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின. வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 57 புள்ளிகளும் நிஃப்டி 10 புள்ளிகளும் சரிந்தன.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
பாரத ஸ்டேட் வங்கி, இந்தஸ்லேண்ட் வங்கி, டெக் மஹிந்திரா, கோல் இந்தியா, மாருதி சுசூகி, டாடா கான்ஸ், ப்ராட்., லார்சன், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், கோடாக் மஹிந்திரா வங்கி, க்ரேசியம், ரிலையன்ஸ், டி.சி.எஸ்., டாடா மோட்டர்ஸ், ஜியோ ஃபினான்சியல், ஹெச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
விப்ரோ, சிப்ளா, சன் ஃபார்மா, பவர்கிரிட் கார்ப், டைட்டன் கம்பெனி, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், ஈச்சர் மோட்டர்ஸ், ஹிண்டால்கோ, ஐ.டி.சி., டிவிஸ் லேப்ஸ், பாரதி ஏர்டெல், என்.டி.பி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, நெஸ்லே, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
கடந்த மூன்று நாட்களாக செக்சென்ஸ் 1600 புள்ளிகள் சரிந்தது. இதனால் டாடால் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்கள் ரூ.5.4 லட்சம் கோடி மதிப்பில் இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 11 நாள்களாக பங்குச்சந்தை வீழ்ச்சியுடனையே காணப்பட்டது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. எலக்ட்ரானிக் மார்கெட் பங்குகள் 5 % அளவு சரிவடைந்தது. கடும் சரிவை சந்த்தி வந்த மாருதி, எம். & எம், ஹீரோ மோட்டர்கார்ப், அசோக்லேலாண்ட், டாடா மோட்டர்ஸ் உள்ளிட்டவை பங்குகளின் மதிப்பு 1% உயர்ந்தது.