Stock Market Update: 600 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ்.. இந்திய பங்குச்சந்தை நிலவரம்.. விவரம் இதோ!
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது.
![Stock Market Update: 600 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ்.. இந்திய பங்குச்சந்தை நிலவரம்.. விவரம் இதோ! Stock Market Update Closing Bell: Nifty around 19 500 Sensex falls 677 pts all sectors in the red Stock Market Update: 600 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ்.. இந்திய பங்குச்சந்தை நிலவரம்.. விவரம் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/02/6da50b3416625a4b0b6ebdc882e7bfa21690972195410333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 676.53 அல்லது 1.02% புள்ளிகள் சரிந்து 65,782.78 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 207.00 அல்லது 1.05% புள்ளிகள் சரிந்து 19.526.55 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
சென்செக்ஸ் 15 நாட்களுக்கு பிறகு 1000 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. மதியம் வர்த்த நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 900 புள்ளிகள் வரை சந்திந்தது. 3.55 மணி நேரப்படி, சென்செக்ஸ் 676 புள்ளிகள் குறைந்து வர்த்தகமானது.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
என்.டி.பி.சி., ஓ.என்.ஜி.சி., பவர்கிரிட் கார்ப், அதானி போர்ட்ஸ், ஹிண்டால்கோ, டெக் மகேந்திரா, டாடா டிவிஸ் லேப்ஸ், நெஸ்லே ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மகிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஹெட்.யு.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்தில் வர்த்தமான நிறுவனங்கள்
ஹீரோ மோட்டர்கார்ப், டாடா ஸ்டீல், டாடா மோட்டர்ஸ், பஜார்ஜ் ஃபின்சர்வ், என்.டி.பி.சி., ஈச்சர் மோட்டர்ஸ், கோல் இந்தியா, பி.பி.சி.எல்., பாரத ஸ்டேட் வங்கி, ஜெ.எஸ்.டபுள்யு. ஸ்டீல்., பஜார்ஜ் ஆட்டோ,லார்சன், டாடா கான்ஸ் ப்ராட், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், கோடாக மகேந்திரா வங்கி, பவர்கிரிட் கார்ப், ரிலையன்ஸ், விப்ரோ, க்ரேசியம், இந்தஸ்லேண்ட் வங்கி,டைட்டன் கமெபெனி, சிப்ளா, க்ரேசியம், சன் பார்மா, இன்ஃபோசிஸ், அதானி போர்ட்ஸ்,பிரிட்டானியா. டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)