(Source: ECI/ABP News/ABP Majha)
Stock Market Closing: காதலர் தினத்தில் ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்கு சந்தை...ஏற்றத்தில் அதானி, எஸ்.பி.ஐ பங்குகள்
இன்றைய நாள் முடிவில் இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது.
இந்திய பங்கு சந்தை, இன்றைய நாள் முடிவில் ( பிப்ரவரி 14 ) ஏற்றத்துடன் முடிவடைந்தது. நேற்றைய தினம் பங்கு சந்தை சரிவடைந்த நிலையில் காணப்பட்ட நிலையில், இன்று ஏற்றத்துடன் காணப்பட்டது முதலீட்டாளர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
பங்கு சந்தை நிலவரம்:
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 600.42 புள்ளிகள் அதிகரித்து 61, 032 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 158.95 புள்ளிகள் அதிகரித்து 17,929.85 புள்ளிகளில் நிறைவடைந்தது.
குறிப்பாக அதானி போர்ட்ஸ், , ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, எஸ்.பி.ஐ, சிப்லா, , டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது.
Sensex surges 600.42 points to finish at 61,032.26; Nifty closes above 17,925
— Press Trust of India (@PTI_News) February 14, 2023
சன் பார்மா, பவர் கிரிட், மாருதி சுசுகி, லார்சன், கோல் இந்தியா, ஆசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் தொடங்கியுள்ளன.
அமெரிக்காவில் பணவீக்கம் நிலவி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் உள்நாட்டு சந்தையில் கவனம் செலுத்தியதன் காரணமாக, இந்திய பங்கு சந்தை உயர்ந்ததாக பங்கு சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Rupee falls 7 paise to close at 82.77 (provisional) against US dollar
— Press Trust of India (@PTI_News) February 14, 2023
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் குறைந்து 82.77 ரூபாயாக உள்ளது.