Small Savings Scheme: சிறுசேமிப்புகளுக்கு பழைய வட்டி விகிதமே தொடரும் - மத்திய அரசு அறிவிப்பு
Small Savings Schemes: சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமானது, முந்தைய காலாண்டு விகிதமே தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 முதல் வரையிலான காலாண்டுக்கான சிறு சேமிப்புகளின் வட்டி விகிதமானது, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அளிக்கப்பட்ட வட்டி விகிதமே தொடரும் என நிதி அமைச்சகம் தெரிவித்தது.
சிறு சேமிப்பு திட்டம்:
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை, ஒவ்வொரு காலாண்டிலும் இந்திய அரசாங்கம் மறுபரிசீலனை செய்கிறது. இந்நிலையில் ( ஏப்ரல்-ஜூன் )2024 காலாண்டில், ஜனவரி முதல் மார்ச் 2024 காலாண்டில் நடைமுறையில் இருந்த விகிதங்களில் இருந்து, தபால் அலுவலக திட்டங்களின் வட்டி விகிதங்களை, அரசாங்கம் மாற்றாமல் வைத்துள்ளது.
2024-25ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், முந்தைய காலாண்டு அளவில் இருந்த அளவுகளே தொடரும் என நிதி அமைச்சகம் தெரிவித்தது. சிறு சேமிப்பு திட்டங்கள் குறித்தான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டுக்கும் மத்திய அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், வரும் காலாண்டுக்கான (2024 -25 நிதி ஆண்டு ) வட்டி விகிதம் குறித்தான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
வட்டி விகிதங்கள்:
- அஞ்சல் சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத வட்டி விகிதமானது, ஜூன் 30 ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு அதே வட்டி விகிதத்தில் தொடர்கிறது.
- 3 ஆண்டு கால வைப்புக்கு வட்டி விகிதமானது 7.1 சதவிகிதத்தில் தொடர்கிறது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் வட்டி விகிதமானது, 8.2 சதவீதமாக தொடர்வதாக தெரிவித்தது.
- தேசிய சேமிப்பு சான்றிதழ்-க்கு வட்டி விகிதமானது 7.7 சதவிகிதத்தில் தொடர்வதாக நிதி அமைச்சகம் தெரிவித்தது.
- சுகன்யா சம்ரிதி கணக்கு திட்டத்திற்கு வட்டி விகிதமானது, 8.2 சதவிகிதத்திலே தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டி விகிதமானது, 7.1 சதவிகிதத்திலேயே தொடர்கிறது.
#SukanyaSamriddhi and #SeniorCitizenSavingsScheme are good instruments for passive investors, provided you qualify to put money in them.#Investing pic.twitter.com/mOaDsNEm1y
— Arbind Roy (@arbindonline) March 10, 2024
கணக்கிடும் முறை:
சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் அவ்வப்போது மதிப்பீடு செய்கிறது. இந்த விலைகளை கணக்கிடுவதற்கான வழிமுறையானது, சியாமளா கோபிநாத் கமிட்டியால் பரிந்துரை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கமிட்டியானது பல்வேறு தரவுகளை ஆராய்ந்து, வட்டி விகிதங்களுக்கான மதிப்பீடுகளை பரிந்துரை செய்கிறது. அதன் அடிப்படையில், இந்திய அரசாங்கமானது வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்கிறது.
Also Read: SBI Debit Card: எஸ்பிஐ சேவை கட்டணம் அதிகரிப்பு; எந்த கார்டுக்கு எவ்வளவு உயர்வு?