Share Market: டிசம்பர் மாதத்தின் முதல் நாள்.. ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...! லாபத்தில் எச்.டி.எஃப்.சி. வங்கி, டி.சி.எஸ். பங்குகள்..!
Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்கு சந்தையானது ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்கு சந்தையானது ஏற்றத்தில் தொடங்கியுள்ளது.
இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 483.42 புள்ளிகள் உயர்ந்து 63,583.07 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 129.25 புள்ளிகள் உயர்ந்து 18,887.60 புள்ளிகளாக உள்ளது.
Sensex rallies 483.42 points to 63,583.07 in early trade; Nifty climbs 129.25 points to 18,887.60
— Press Trust of India (@PTI_News) December 1, 2022
தொடர்ந்து 5-வது நாளாக இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்துடனே தொடங்கி உள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். அதன்படி, அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வட்டிவீதம் பெரிய அளவில் உயர்த்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தகவல் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதும் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.
ஏற்கெனவே நேற்றைய வர்த்தகம் முடிவில், இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 63 ஆயிரம் புள்ளிகளை கடந்து வரலாற்று சாதனை படைத்தது. நிப்ஃடியானது 18, 700 புள்ளிகளுக்கு மேல் முதல் முறையாக உயர்ந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் ஆறுதல் அடைந்து வருகின்றனர்.
லாபம் - நஷ்டம்
ஹிண்டல்கோ, டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்சில் டெக், டிசிஎஸ், லார்சன், எச்டிஎஃப்சி வங்கி, டாடா ஸ்டீல், சன் பார்மா, அதாணி போர்ட்ஸ், எஸ்பிஐ, அல்ட்ரா டெக் சிமெண்ட், ரிலையன்ஸ், கோடக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி, நெஸ்டல், பாரதி ஏர்டெல், அப்போலோ மருத்துவமனை, என்டிபிசி, பஜாஜ் பின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
பஜாஜ் ஆட்டோ, யுபிஎல், எம்&எம், சிப்ளா, ஏசியன் பைன்ஸ், பவர் கிரிட் கார்ப், மாருதி சுசிகி, ஐடிசி, பிபிசிஎல், பிரிட்டானியா, ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா, ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
ரூபாயின் மதிப்பு:
மேலும் சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது. மேலும், கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Rupee rises 27 paise to 81.03 against US dollar in early trade
— Press Trust of India (@PTI_News) December 1, 2022
இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 27 காசுகள் அதிகரித்து 81.03ரூபாயாக ஆக உள்ளது.