மேலும் அறிய

Share Market: சென்செக்ஸ் கிடுகிடு உயர்வு...! 24 நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரிப்பு..

Share Market: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,019 புள்ளிகள் உயர்ந்து 61,632 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் குறைந்ததையடுத்து, இந்திய பங்கு சந்தை பெரிய அளவிலான ஏற்றம் கண்டுள்ளது.

பங்குச் சந்தை நிலவரம்:

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,056 புள்ளிகள் உயர்ந்து 61,670.13 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில், 24 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாகி வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இன்று காலை தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 809.64 புள்ளிகள் அதிகரித்து 61,423.34  ஆக புள்ளிகளாக இருந்த நிலையில், தற்போது ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளளது. 

லாபம்-நஷ்டம்

இன்போ ஏஜ், ஜின்டா ஸ்டீல், எச்டிஎஃப்சி, இன்ஃபொயாஸ், எச்சிஎல், டிசிஎஸ், டெக் மகேந்திரா, அப்போலோ மருத்துவமனை, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

இந்தியன் ஹோட்டல், ட்ரெட், முத்தூட் பைனான்ஸ்,  பிரிட்டானியா, எஸ்பிஐ, என்டிபிசி, ஐசிஐசி வங்கி, கோடக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

அமெரிக்காவின் தாக்கம்:

அமெரிக்க இடைத்தேர்தல் முடிவையொட்டி, அங்கு வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் எதிர்பார்ப்பு கிளம்பியது. இதனால் இந்திய பங்குச் சந்தையில் பெரும் தாக்கம் ஏற்ப்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

உலகளவில் பணவீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதாக, அமெரிக்க மத்திய வங்கி, கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவு எடுத்தது. இதையடுத்து 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 4 சதவீதமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம், கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளதால், அமெரிக்காவின் வட்டி விகித கிடுபடி குறையும் சூழல் நிலவுகிறது. இதனால் வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கும் தன்மை ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக இந்திய பங்கு சந்தை ஏற்றம் கண்டுள்ளது.

கச்சா எண்ணெய் மீது தாக்கம்

மேலும், சீனாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாகன பயன்பாடு குறைந்துள்ளது

இதனால், கச்சா எண்ணெய் தேவையானது உலகளவில் குறைய வாய்ப்புள்ளதால், கச்சா எண்ணெய்யின் விலை குறையும் சூழல் உள்ளது. இதனால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சற்று குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ரூபாயின் மதிப்பு:

Rupee rises 64 paise to 80.76 against US dollar in early trade

— Press Trust of India (@PTI_News) November 11, 2022

இன்று காலை நிலவரப்படி, அமெரிக்கு டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 64 காசுகள் அதிகரித்து 80.76 ரூபாயாக ஆக உள்ளது. 

Also Read: Tamil Nadu Rain News Today LIVE: சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5  பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Savukku Shankar appear Trichy court  : ”பெண் காவலர்கள் அடிச்சாங்க” சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுSavukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5  பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
CSK : மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
Actor Chandra Lakshman: இன்ப செய்தி! கயல் சீரியல் மூலம் கம்பேக் தரும் காதலிக்க நேரமில்லை ஹீரோயின்!
Actor Chandra Lakshman: இன்ப செய்தி! கயல் சீரியல் மூலம் கம்பேக் தரும் காதலிக்க நேரமில்லை ஹீரோயின்!
Embed widget