Share Market : இன்று சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை... சரிவில் அதானி போர்ட்ஸ், டாடா மோட்டர்ஸ்...
Share Market : தொடர்ந்து இரண்டு நாட்களாக ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை, இன்று சரிவுடன் தொடங்கியது.
Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளன.
இன்று காலை தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 280.36 புள்ளிகள் குறைந்து 60,753.19 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 87.35 புள்ளிகள் குறைந்து 18,069.65 புள்ளிகளாக உள்ளது.
Sensex falls 280.36 points to 60,753.19 in early trade; Nifty declines 87.35 points to 18,069.65
— Press Trust of India (@PTI_News) November 10, 2022
லாபம்-நஷ்டம்:
கோல்கேட், லுபின், கோல் இந்தியா, கோடக் மகேந்திரா, சிப்ளா, சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
டாடா மோட்டர்ஸ், அதானி போர்ட்ஸ், பிரமல் என்டர், ராம்கோ சிமெண்ட், எம்&எம், டைட்டன் கம்பெனி, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டன.
வட்டி விகிதத்தில் மாற்றமா?
அமெரிக்க இடைத்தேர்தல் முடிவையொட்டி, அங்கு வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்கு சந்தையிலிருந்து அமெரிக்காவில் முதலீடு செய்யும் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய பங்கு சந்தை சரிவில் சென்றதாக கூறப்படுகிறது.
உலகளவில் பணவீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதாக, அமெரிக்க மத்திய வங்கி, கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவு எடுத்தது. இதையடுத்து 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 4 சதவீதமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய் மீது தாக்கம்
மேலும், சீனாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கச்சா எண்ணெய் தேவையானது உலகளவில் குறைய வாய்ப்புள்ளதால், கச்சா எண்ணெய்யின் விலை குறையும் சூழல் உள்ளது.
ரூபாயின் மதிப்பு:
Rupee falls 17 paise to 81.64 against US dollar in early trade
— Press Trust of India (@PTI_News) November 10, 2022
இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்கு டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 17 காசுகள் குறைந்து 81.64ருபாயாக ஆக உள்ளது.