Share Market : சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 8-வது நாளாக சரிவுடன் வர்த்தகமான சென்செக்ஸ்!
Share Market : இந்திய பங்குச்சந்த சரிவுடன் முடிவடைந்துள்ளது.
Share Market Closing Bell : இந்திய பங்குச்சந்த சரிவுடன் முடிவடைந்துள்ளது.
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 326.23 அல்லது 0.55% புள்ளிகள் சரிந்து 58,962.12 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 88.75 அல்லது 0.51 % புள்ளிகள் குறைந்து 17,303.95 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஒரு வாரமாக இந்திய பங்குச்சந்தையானது சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், சரிவுடன் நிறைவடைந்துள்ளது.
லாபம்-நஷ்டம்
அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்ப்ரைஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பிரிட்டானியா, பவர்கிரிட் கார்ப், அல்ட்ராடெட் சிமெண்ட், எம்.&எம்., டாடா கான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி., டாடா மோட்டார்ஸ், பஜார்ஜ் ஆட்டோ, நெஸ்லே, கோடாக் மஹிந்திரா, ஹெச்.டி.எஃப்.சி. லைஃப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
சிப்ளா, ஹிண்டால்கோ, டாக்டர் ரெட்டி லேப்ஸ், ஓ.என்.ஜி.சி., டாடா ஸ்டீல், யு,பி.எல்., ஜெ,எஸ்.டபுள்யு. ரிலையன்ஸ்ம் பஜார்ஜ் ஃபின்கார்ப், ஹிண்டாலோ, ரெட்டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
கடந்த ஒரு வாரமாகவே பங்குச்சந்தை மந்தமாகவே இருந்துள்ளது. அதன் காரணமானது, அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்தபாடில்லாமல் இருப்பதால் அந்நாட்டு பெடரல் ரிசர்வ் வட்டி வட்டிவீகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பொருளாதாரத்தின் எதிர்மறையான போக்கு முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஏழு நாட்களுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.