(Source: ECI/ABP News/ABP Majha)
Share Market Update: வார இறுதியில் ஏற்றத்துடன் நிறைவடைந்த சென்செக்ஸ்; 22,000 புள்ளிகளை தாண்டிய நிஃப்டி
Share Market Update Tamil: இன்றைய நாள் முடிவில் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்தது, நிஃப்டி புள்ளிகள் 22,000க்கும் மேலும் சென்றது.
நேற்று 1000 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்த மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், இன்று 260 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், வார இறுதி வர்த்தக நாளான இன்று ஏற்றத்துடன் சென்செக்ஸ், நிஃப்டி நிறைவடைந்த நிலையில் முதலீட்டாளர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.
ஏற்றமடைந்த பங்குச்சந்தை:
கடந்த சில தினங்களாக நிலையற்ற தன்மையுடன் காணப்படும் பங்குச் சந்தையானது, நேற்றைய தினம் பெரும் சரிவை சந்தித்த நிலையில், இன்றைய நாள் முடிவில் சற்று ஏற்றத்தை அடைந்தது.
இன்றைய நாள் முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்து 72, 664 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி-50, 97 புள்ளிகள் உயர்ந்து 22,054 புள்ளிகளில் வர்த்தகமானது
பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால்கேப் ஆகியவற்றின் பங்குகள் தலா 0.8% உயர்ந்தன. நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் ஸ்மால்கேப் 100 முறையே 0.86 சதவீதம் மற்றும் 0.69 சதவீதம் அதிகரித்தது. பேங்க் நிஃப்டி 38 புள்ளிகள் குறைந்து 44, 449. 65 புள்ளிகளில் வர்த்தகமானது.
Sensex climbs 260.30 points to settle at 72,664.47; Nifty rises 97.70 points to 22,055.20
— Press Trust of India (@PTI_News) May 10, 2024
பங்குகள் நிலவரம்:
பவர் கிரிட், என்டிபிசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஐடிசி ஆகியவை தலா 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன. ஏர்டெல், ஹெச்யுஎல், டாடா மோட்டார்ஸ், டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் மாருதி ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 0.75 சதவீதம் உயர்ந்தது.
டிசிஎஸ், கோடக் மகேந்திரா வங்கி, இன்ஃபோசிஸ், விப்ரோ, எம்&எம் மற்றும் எச்டிஎப்சி வங்கி ஆகியவை பின்தங்கியுள்ளன.
இந்தியாவில், கடந்த சில மாதங்களாக பெரும் ஏற்றத்துடன் சென்று கொண்டிருந்த இந்திய பங்குச் சந்தையானது, சமீப தினங்களாக பெரும் சரிவை சந்திப்பதை காண முடிகிறது. இந்நிலையில், இன்று ஏற்றத்துடன் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வர்த்தகமாகியிருப்பதை பார்க்க முடிகிறது. இதற்கு, இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலையின் ஏற்றமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் நிலையற்ற தன்மையுடன் இருப்பதை பார்க்கப்படுகிறது.
Also Read: Gold Price Rise: மீண்டும்.. மீண்டுமா? ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை!