Stock Market Update: ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்தியப் பங்குச்சந்தை - முழு விவரம் உள்ளே!
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 190.52 அல்லது 0.22 % புள்ளிகள் உயர்ந்து 65,993 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 70.90 அல்லது 0.36 % புள்ளிகள் உயர்ந்து 19,632.10 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
டாக்டர் ரெட்டி லேப்ஸ், ஹிண்டால்கோ, ஜெ.எஸ்.டபுள்யு, டாடா மோட்டர்ஸ், எம் அண்ட் எம், ஓ.என்.ஜி.சி. கோல் இந்தியா, டெக் மகேந்திரா, யு.பி.எல். டாடா ஸ்டீல், ஐ.டி.சி., டாடா கான்ஸ், அதானி எண்டர்பிரைசர்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, அதானி போர்ட்ஸ், லார்சன், பஜார்ஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், விப்ரோ, சன் பார்மா, பஜார்ஜ் ஃபின்சர்வ், கோடாக் மகேந்திரா வங்கி க்ரேசியம் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்தில் வர்த்தகமான நிறுவனங்கள்
டிவிஸ் லேப்ஸ், மாருதி சுசூகி, அப்பல்லோ மருத்துவமனை, பஜார்ஜ் ஃபினான்ஸ், ஐ.சி.ஐ.சிஐ, வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், பவர்கிரிட் கார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பிரிட்டானியா, பாரதி ஏர்டெல், நெஸ்லே, ஹீரோ மோட்டர்கார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.
பொதுத்துறை வங்கிகள் பங்குகள் மதிப்பு மட்டுமே அதிகரித்தது. மற்ற ஃபார்மா உள்ளிட்ட மற்ற துறைகள் சரிவுடன் வர்த்தகமாகின. ஆறு வாரங்களாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறி விலையும் உயர்ந்துள்ளது.
டிவிஸ் லேப்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, மாருது சுசூகி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்டவற்றின் பங்குகள் மதிப்பு சரிவுடன் வர்த்தகமாகின.
இன்றைய வர்த்தக நேர முடிவில் 1963 பங்குகளின் மதிப்பு உயர்ந்த்திருந்தது; 1521 பங்குகள் சரிவை சந்தித்தன. 142 பங்குகள் மாற்றிமின்றை தொடர்ந்தன.
இந்திய ரூபாயின் மதிப்பு அளவு சரிந்தது. டாலரின் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் அதிகரிப்பு ஆகிய காரணத்தால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.8 ஆக இருந்தது. நேற்று 82.74 ஆக இருந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

