SBI Bank ATM Charges | எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..! நாளை முதல் புதிய விதிகள்!
எஸ்பிஐ-ன் புதிய விதிகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது சேவைக் கட்டண விதிகளை திருத்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை முதல், அடிப்படை சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் மாதம் 4 முறைக்கு மேலாக எஸ்பிஐ வங்கிக் கிளையில் (அ) ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு முறைக்கு மேல், ஒரு பரிவர்த்தனைக்கு 15 ரூபாயும்,ஜிஎஸ்டி சேவை வரியும் வசூலிக்கப்படும். மேலும், ஒரு வாடிக்கையாளர் வேறொரு வங்கியின் ஏடிஎம்(ATM)ஐ பயன்படுத்தினால் அந்த ஒரு ஏடிஎம்(ATM) பரிவர்த்தனைக்கும் இதே கட்டணம் வசூலிக்கப்படும். மூன்றாம் தரப்பினர் வங்கி காசோலையினைப் பயன்படுத்தி பணம் எடுத்தால் , கண்டிப்பாக KYC யினை வங்கியிடம் சமர்ப்பிக்க எஸ்.பி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது
காசோலை புத்தக வசதி தொடர்பான சேவைக் கட்டணங்களையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்பிஐ சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு முதல் 10 காசோலை புத்தகம் இலவசமாக வழங்கப்படும். அதன்பின், கேட்டுப்பெறும் 10 செக் புத்தக வசதிகளுக்கு 40 ரூபாயும் ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும் ; 25 செக் புத்தக வசதிகளுக்கு 75 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரியும், அவசரகால செக் புத்தக வசதிகளுக்கு 50 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டும்.
மேலும், அந்தந்த எஸ்பிஐ ஏடிஎம்-ல் பண பரிவர்த்தனை தவிர எந்த சேவையை பயன்படுத்தினாலும், மற்ற வங்கி ஏடிஎம்களில் இருப்பு நிலை பற்றிக்கேட்கும் பொழுது கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது. பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் நாட்டிலுள்ள அனைத்து ஏடிஎம்களிலும் இலவசமாக பரிவர்த்தனை செய்கின்றனர். எந்த ஒரு ஏடிஎம்.மிலும் வாடிக்கையாளர் அணுகி கட்டணமின்றிப் பயன்படுத்திட வங்கிகள் முன்வர வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி முன்னதாக தெரிவித்தது. மேலும், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20க்கு மிகாமல் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
எஸ்பிஐயின் ஏடிஎம் கட்டணம் அறிவிப்புக்கு பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். ஏடிஎம் கட்டண அறிவிப்புகளை வங்கி நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ்பிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கம் மூலம் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கொரோனா காலத்தில் பாதுகாப்பாக வங்கி சேவைகளை செய்ய இலவச தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது.
Stay safe at home, we are there to serve you. SBI provides you a contactless service that will help you with your urgent banking needs.
— State Bank of India (@TheOfficialSBI) June 30, 2021
Call our toll free number 1800 112 211 or 1800 425 3800.#SBIAapkeSaath #StayStrongIndia #SBI #StateBankOfIndia #IVR #TollFree pic.twitter.com/K5k2ebwbvQ
அலர்ட்.. அலர்ட்.. தேதியெல்லாம் தள்ளி வச்சாச்சு.. முக்கிய தகவல்கள் இங்கே!