Reliance Rooftop Theatre: முதல் ரூஃப் டாப் தியேட்டர்... ஜியோ மாலில் பிரமிக்க வைக்கும் வசதிகள்!
ஜியோ டிரைவ்-இன் தியேட்டர் என்றழைக்கப்படும் இது ரூஃப் டாப் உடன் கூடிய டிரைவ் இன் திறந்தவெளி தியேட்டர் ஆகும். இங்கு ஒரே நேரத்தில் 290 கார்களை நிறுத்தும் வசதி இருக்கிறது.
மும்பையின் வர்த்தக மையமாக திகழும் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் 17.5 ஏக்கர் பரப்பளவில் ஜியோ ஃவேர்ல்ட் டிரைவ் ஷாப்பிங் மால் அமைந்துள்ளது. இந்த மாலில் பொழுதுபோக்கு, உணவு உள்ளிட்டவைகளில் இதுவரை இந்தியாவிலேயே இல்லாத அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
உலக அளவில் பிரபலமான உணவு வகைகளைக் கொண்ட 27 உணவகங்கள் இந்த மாலில் உள்ளன. மும்பையின் முதல் ரூஃப் டாப் திரையரங்கமும் இங்கு இருக்கிறது.
ஜியோ டிரைவ்-இன் தியேட்டர் என்றழைக்கப்படும் இது ரூஃப் டாப் உடன் கூடிய டிரைவ் இன் திறந்தவெளி தியேட்டர் ஆகும். இங்கு ஒரே நேரத்தில் 290 கார்களை நிறுத்தும் வசதி இருக்கிறது. பிவிஆர் நிறுவனத்தால் இந்தத் தியேட்டர் இயக்கப்படுகிறது. நவம்பர் 5ஆம் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்தத் தியேட்டர் கொண்டுவரப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோ ஃவேர்ல்ட் டிரைவ் மாலில், Nine Dine, Motodo என உலகப் புகழ்பெற்ற உணவகங்கள் உள்ளன. இவை தவிர See saw என்ற புத்தம் புதிய உணவகம் ஒன்று பிரபல சமையல்கலை வல்லுனரான அதிதி துகாரின் பங்களிப்புடன் செயல்பட இருக்கிறது. உலகின் மிகச்சிறந்த உணவுகளை ஒரே இடத்தில் கொண்டு வந்து தரும் இந்த உணவகத்தில் பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணிகளையும் அழைத்து வரலாம். பொதுமக்களுக்கும், அவர்களின் செல்லப்பிராணிகளுக்கும் இங்கு உணவு பரிமாறப்படும் என்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பிரமாண்ட மால் தொடர்பாக ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் இயக்குனரான ஈஷா அம்பானி கூறுகையில், “நவீன கால வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்வதை உணர்வுப்பூர்வமாகவும், செழுமைப்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டதே ரிலையன்ஸ் மால். ஜியோ ஃவேர்ல்ட் டிரைவ் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள சிறப்பான சில்லரை வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை மும்பைக்கு கொண்டுவந்திருக்கிறோம். இது வெறும் ஒரு பிராண்ட் அல்லது இடம் மட்டுமல்ல, இதுவரை பார்த்திராத, அனுபவித்திராத ஒரு உலகளாவிய தனிமனித அனுபவத்தை இங்கு பெறலாம்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்த மாதிரி 2 லட்சம் பேருக்கும் கிடைக்குமா? - கேள்வி எழுப்பிய முன்னாள் நீதிபதி
NEET UG Result Declared: நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின... செப்.12ல் தேர்வு நடந்தது!