மேலும் அறிய

RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்

இந்திய ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. இந்த நோட்டுகள் காகித நோட்டுகளை விட அதிக காலம் உழைக்கக்கூடியவை. மேலும் இவற்றின் கள்ளநோட்டு தயாரிப்பதும் மிகவும் கடினம்.

இன்றைய காலகட்டத்தில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் காகித நோட்டுகள் மிக விரைவாக சேதமடைகின்றன. குறிப்பாக, அடிக்கடி கைமாறும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகள், சில மாதங்களுக்குள்ளேயே கருப்பாகி, அழுக்காகி, கிழிந்து, பழையதாகி, சேதமடைந்துவிடுகின்றன. இந்தப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் பிளாஸ்டிக் அல்லது பாலிமர் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. இங்கு, காகித நோட்டுகளுக்கும், பிளாஸ்டிக் நோட்டுகளுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி எழுகிறது. மேலும், காகித நோட்டுகளை விட, பிளாஸ்டிக் நோட்டுகள் அதிக காலம் நீடிக்குமா.? முழு விவரங்களையும் தெரிந்துகொள்வோம்.

காகித நோட்டுடன் ஒப்பிடும்போது பிளாஸ்டிக் நோட்டின் ஆயுட்காலம் எவ்வளவு.?

பொதுவாக, காகிதம் அல்லது பருத்தி நோட்டுகள் நல்ல நிலையில் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும். மேலும், சிறிய நோட்டுகளின் ஆயுட்காலம் இன்னும் குறைவாகவே இருக்கும். மறுபுறம், பிளாஸ்டிக் நோட்டுகள் காகித நோட்டுகளை விட ஏறக்குறைய இரண்டரை முதல் நான்கு மடங்கு அதிக காலம் நீடிக்கும். சில சமயங்களில், இந்த நோட்டுகளை ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக பயன்படுத்தலாம். இதற்கு முக்கிய காரணம், பிளாஸ்டிக் நோட்டுகள் தண்ணீர், வியர்வை அல்லது அழுக்கை எளிதில் உறிஞ்சுவதில்லை. இதனால், அவை சிதைவடைவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.

மேலும், இந்த நோட்டுகள் எளிதில் கிழியாதவை மற்றும் அதிக நீடித்து உழைக்கக்கூடியவை என கருதப்படுகின்றன. சில நாடுகளில், பிளாஸ்டிக் நோட்டுகளை சலவை இயந்திரத்தில் போட்டாலும் சேதமடையாமல் இருக்கும்.

இது இந்தியாவில் எப்போது தொடங்கியது.? தற்போதைய திட்டம் என்ன.?

2012-13 ஆம் ஆண்டில், மத்திய அரசு பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியது. இது கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், புவனேஸ்வர் மற்றும் சிம்லா ஆகிய ஐந்து நகரங்களில், மாறுபட்ட வானிலை நிலைகளின் கீழ் சோதிக்கப்பட்டது.

இருப்பினும், தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக, அந்த நேரத்தில் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சிடுவது செலவு மிக்கதாக இருந்தாலும், அவற்றின் நீண்ட ஆயுள் காரணமாக, அவை நீண்ட கால அடிப்படையில் அரசாங்கத்தின் செலவுகளை குறைக்கும். மேலும், கள்ளநோட்டு தயாரிப்பாளர்கள் பிளாஸ்டிக் நோட்டுகளை போலியாக உருவாக்குவது மிகவும் கடினம்.

அதனால், இந்திய ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்தினால் நன்றாகத் தான் இருக்கும். நாமும் அதை கிழியுமோ, அழுக்காகிவிடுமோ என்ற பயமில்லாமல் எடுத்துச் செல்லலாம். அப்படியே அழுக்காகிவிட்டாலும் அவற்றை துவைத்துக்கொள்ளலாம்.!

 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
Gold and silver rate today : திடீரென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய விலை நிலவரம் இதோ..
திடீரென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய விலை நிலவரம் இதோ..
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget