Gold Silver Rate Today: நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மாலையில் திடீரென அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; இப்போது விலை என்ன.?
தங்கத்தின் விலை இன்று காலை மாற்றமின்றி இருந்த நிலையில், மாலையில் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை என்ன என்று பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் மாற்றமின்றி இருந்தது. இந்நிலையில், மாலையில் திடீரென சவரனுக்கு 1,200 ரூபாய் விலை உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
தொடரும் தங்கத்தின் மீதான முதலீடு
தங்க நகைகளின் மீதான ஈர்ப்பு நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு சவரன் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1 லட்சத்து 34 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்டு நகைப்பிரியர்களை அதிரவைத்தது. இந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் இடையே போர் காரணமாக கச்சா தங்கத்தின் விலையானது சற்று குறைய தொடங்கியது.
முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது தங்களது பார்வையை திருப்பியதால் தங்கம் விலையானது குறைய தொடங்கியது. அந்த வகையில் கடந்த 3 மாதமாக ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 10 ஆயிரம் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது போர் ஓய்ந்திருக்கும் நிலையில் மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது.
ஏறி இறங்கும் தங்கத்தின் விலை
- ஆகஸ்ட் 3-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 13,250 ரூபாய்க்கும், சவரனுக்கு 250 ரூபாய் அதிகரித்து 1,06,000க்கு விற்பனை
- ஆகஸ்ட் 4-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 13,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,05,600க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலையில் சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை. மாலையில் மீண்டும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,07,840 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 6-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 270 ரூபாய் உயர்ந்து 13,750 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,160 ரூபாய் அதிகரித்து 1,10,000 ரூபாய்க்கு விற்பனை.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், இன்று காலை தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இருந்த சூழலில், மாலையில், கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்ந்து 13,900 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் அதிகரித்து 1,11,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம், தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களில் மட்டும், 5,600 ரூபாய் விலை உயர்ந்து பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை
வெள்ளி விலையானது நேற்று கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்ந்து 250 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடிக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















