IMPS Transfer Limit: ஐஎம்பிஎஸ் பணபரிமாற்றம்; ரூ 2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு - ஆர்பிஐ அறிவிப்பு!
ஆர்.டி.ஜி.எஸ் இப்போது 24 மணி நேரமும் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், ஐ.எம்.பி.எஸ் இன் தீர்வு சுழற்சிகளில் இதே போன்ற அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் மற்றும் தீர்வு அபாயங்களைக் குறைக்கிறது.
ஐஎம்பிஎஸ் என்ற உடனடி பணபரிமாற்ற அளவு ரூபாய் 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தினசரி வரம்பை வாடிக்கையாளர்களின் வசதிக்காக உயர்த்தப்பட்டுள்ளது.
உடனடி கட்டணச் சேவை (IMPS) பல்வேறு தளங்கள் மூலம் 24 மணி நேரமும் உடனடி உள்நாட்டு நிதி பரிமாற்ற வசதியை வழங்குகிறது. ஐ.எம்.பி.எஸ் அமைப்பின் முக்கியத்துவத்தைகருத்தில் கொண்டும், நுகர்வோர் வசதிக்காகவும், ஒரு பரிவர்த்தனை வரம்பை ₹2 லட்சமாக ₹5 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது" என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
ஆர்.டி.ஜி.எஸ் இப்போது 24 மணி நேரமும் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், ஐ.எம்.பி.எஸ் இன் தீர்வு சுழற்சிகளில் இதே போன்ற அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் மற்றும் தீர்வு அபாயங்களைக் குறைக்கிறது.
"உள்நாட்டு கட்டண பரிவர்த்தனைகளை செயலாக்குவதில் ஐ.எம்.பி.எஸ் அமைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, எஸ்எம்எஸ் மற்றும் ஐவிஆர்எஸ் தவிர மற்ற தளங்களுக்கு ஒரு பரிவர்த்தனை வரம்பை ₹2 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் பேமெண்ட்டுகளை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு ₹2 லட்சத்திற்கும் அதிகமான டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கான கூடுதல் வசதியை வழங்கும்" என்று ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
#JUSTIN | ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4% ஆக தொடரும் - ஆர்.பி.ஐ. கவர்னர் சக்தி காந்த தாஸ்https://t.co/wupaoCQKa2 | #RBI | #RepoRate | #Banks pic.twitter.com/7xSjtGMNfW
— ABP Nadu (@abpnadu) October 8, 2021
முன்னதாக, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4 சதவீதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறினார். கடந்த மே மாதத்தில் இருந்து 8ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4 சதவீதமாக தொடருகிறது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 3.35 சதவீதமாக தொடரும் என்றும் கூறினார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்