மேலும் அறிய

Petrol-Diesel Price, 17 August: 4-வது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லை..!

பெட்ரோல், டீசல்  உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 4வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.47க்கு விற்பனை செய்யப்படுகிறது. 31ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த 13ஆம் தேதி வரை பெட்ரோல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டது. கடந்த  28 நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 102.49-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, “ இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் இருசக்கர வாகனங்கள் அதிகம். பெட்ரோல் விலை உயர ஒன்றிய அரசுதான் காரணம் என்றாலும் மாநில அரசு வரியை குறைக்கிறது. பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படுகிறது. இது உழைக்கும் வர்க்கத்தினருக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு ரூபாய் 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.“ இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பால் விலை குறைப்பு அன்று நள்ளிரவு முதல் அமலாகி, தமிழ்நாட்டில் மூன்று இலக்கத்தில் விற்கப்பட்டு வந்த பெட்ரோல் விலை மீண்டும் இரட்டை இலக்கத்தில் விற்கப்பட்டது.  டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விற்கப்பட்டு வருகிறது.

Petrol-Diesel Price, 17 August: 4-வது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லை..!

இந்த நிலையில், பெட்ரோல், டீசல்  உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன்,  ஐமு கூட்டணி அரசால் வெளியிடப்பட்ட எரிபொருள் பத்திரங்களுக்கு இப்போதைய அரசு 5 ஆண்டுகளில் ரூ.70195 கோடி வட்டி செலுத்துள்ளது. 2026க்குள் மேலும் ரூ.37000 கோடி வட்டியாக செலுத்த வேண்டியுள்ளதால், எரிபொருள் விலையை குறைக்க இயலவில்லை என்றார்.

மேலும், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட கடன் சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை.  மக்களின் கவலை ஏற்புடையதே. ஆனால் மத்திய மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை தீர்வு இல்லை. 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது. காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என்றார்.

கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தி வருகிறது. 2014ம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி, 2021 மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 32.9 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 216 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து வரிபங்கானது மற்ற மாநிலங்களைவிட குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Avaniyapuram Jallikattu 2025 LIVE: சீறும் காளைகள்... அடக்கும் காளையர்கள்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. நேரலை!
Avaniyapuram Jallikattu 2025 LIVE: சீறும் காளைகள்... அடக்கும் காளையர்கள்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. நேரலை!
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் ; ஐயனை நோக்கி திருவாபரண பெட்டி ; புராண கதை தெரியுமா உங்களுக்கு !
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் ; ஐயனை நோக்கி திருவாபரண பெட்டி ; புராண கதை தெரியுமா உங்களுக்கு !
Pongal 2025: வசூல் வேட்டைதான்! தியேட்டர்களில் தீயாய் நடக்கும் டிக்கெட் புக்கிங் - பொங்கல் குஷிதான்
Pongal 2025: வசூல் வேட்டைதான்! தியேட்டர்களில் தீயாய் நடக்கும் டிக்கெட் புக்கிங் - பொங்கல் குஷிதான்
Ajith Kumar :
Ajith Kumar : "விடாமுயற்சிக்கும் உந்து சக்தி" உங்கள் அன்புக்கு நன்றி! அஜித் வெளியிட்ட பொங்கல் பரிசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Avaniyapuram Jallikattu 2025 LIVE: சீறும் காளைகள்... அடக்கும் காளையர்கள்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. நேரலை!
Avaniyapuram Jallikattu 2025 LIVE: சீறும் காளைகள்... அடக்கும் காளையர்கள்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. நேரலை!
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் ; ஐயனை நோக்கி திருவாபரண பெட்டி ; புராண கதை தெரியுமா உங்களுக்கு !
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் ; ஐயனை நோக்கி திருவாபரண பெட்டி ; புராண கதை தெரியுமா உங்களுக்கு !
Pongal 2025: வசூல் வேட்டைதான்! தியேட்டர்களில் தீயாய் நடக்கும் டிக்கெட் புக்கிங் - பொங்கல் குஷிதான்
Pongal 2025: வசூல் வேட்டைதான்! தியேட்டர்களில் தீயாய் நடக்கும் டிக்கெட் புக்கிங் - பொங்கல் குஷிதான்
Ajith Kumar :
Ajith Kumar : "விடாமுயற்சிக்கும் உந்து சக்தி" உங்கள் அன்புக்கு நன்றி! அஜித் வெளியிட்ட பொங்கல் பரிசு
அஜித் வாங்கியது ஆறுதல் பரிசா..? வதந்திகளை பரப்புகிறார்களா விஜய் ரசிகர்கள் ?
அஜித் வாங்கியது ஆறுதல் பரிசா..? வதந்திகளை பரப்புகிறார்களா விஜய் ரசிகர்கள் ?
Pongal 2025: இப்படியும் உண்டா...? ஆண்கள் மட்டுமே பொங்கல் வைக்கும் வினோத திருவிழா - எங்கு தெரியுமா..?
இப்படியும் உண்டா...? ஆண்கள் மட்டுமே பொங்கல் வைக்கும் வினோத திருவிழா - எங்கு தெரியுமா..?
Pongal wishes 2025 : ”வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!” அரசியல் கட்சி தலைவர்களின் பொங்கல் வாழ்த்துகள்..
Pongal wishes 2025 : ”வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!” அரசியல் கட்சி தலைவர்களின் பொங்கல் வாழ்த்துகள்..
Train Accident: திடீரென பயங்கர சத்தம் ; தடம்புரண்ட ரயில்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
திடீரென பயங்கர சத்தம் ; தடம்புரண்ட ரயில்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
Embed widget