மேலும் அறிய

சதத்தில் சாய்ந்தாடும் பெட்ரோல் விலை... டீசலும் ஊசலாடுகிறது!

தமிழ்நாட்டில் நேற்று ரூபாய் 100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் இன்றும் உயர்ந்து லிட்டருக்கு ரூபாய் 100.27க்கு விற்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலே சென்று கொண்டிருக்கிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 99.80க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.93.72க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ரூபாய் 100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல்,  நேற்று முதன்முறையாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரூபாய் 100ஐத் தாண்டி விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 33 காசு அதிகரித்து நேற்று ரூபாய் 100.13க்கு விற்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று மாநிலத்திலே அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக ரூபாய் 102க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று ரூபாய் 93.72 காசுகளுக்கு விற்கப்பட்ட டீசல் இன்று லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்து 93.86க்கு விற்கப்படுகிறது. நேற்று 100.13 காசுகளுக்கு விற்கப்பட்ட பெட்ரோல் இன்று 47 காசுகள் அதிகரித்து ரூபாய் 100.27க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் 22-ந் தேதி(அதாவது 10 நாட்களுக்கு முன்பு) ரூபாய் 98.65க்கு சென்னையில் பெட்ரோல் விற்கப்பட்டது.


சதத்தில் சாய்ந்தாடும் பெட்ரோல் விலை... டீசலும் ஊசலாடுகிறது!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த விலை நிலவரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், எண்ணெய் நிறுவனங்களின் லாபம், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

கலால் வரி என்பது மத்திய மாநில அரசுகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும் வரி. கடந்த ஜனவரி மாதம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 57 டாலராக இருந்தது. கச்சா எண்ணெய் விலை தற்போது மேலும் குறைந்து 40 டாலராக உள்ளது. ஆனால், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி விதிப்பு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள காரணமாக அத்தியாவசிய பொருட்களான காய்கறி உள்ளிட்ட பலவற்றின் விலை உயரும் அபாயம் உள்ளது.  


சதத்தில் சாய்ந்தாடும் பெட்ரோல் விலை... டீசலும் ஊசலாடுகிறது!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை ஏறி இறங்கும், அல்லது மாற்றமின்றி தொடரும். 

தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெட்ரோலின் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை ஆகிய நிலையில், நேற்று மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வடமாநிலங்களில் சதத்தை தொட்ட பெட்ரோல் விலை தமிழ்நாட்டிலும் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்பு ஏதும் தற்போது வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசின் வரி உயர்வு காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக குறிப்பிட்டார், தமிழகத்தின் நிதிநிலைமை தற்போது சரியில்லை என்றும், எப்போது சரியாகிறதோ அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தது போல பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைப்போம் எனவும் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Kerala Bumper Lottery Result 2026 LIVE: முதல் பரிசே ரூ.10 கோடி; கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி குலுக்கல்- யாருக்கு எவ்வளவு?
Kerala Bumper Lottery Result 2026 LIVE: முதல் பரிசே ரூ.10 கோடி; கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி குலுக்கல்- யாருக்கு எவ்வளவு?
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Gold and silver rate today : ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
Kerala Bumper Lottery: வரலாற்றில் முதல்முறை; ரூ.30 கோடி முதல் பரிசு, மொத்தம் ரூ.125 கோடி- கேரளா பம்பர் லாட்டரி விவரம்!
வரலாற்றில் முதல்முறை; ரூ.30 கோடி முதல் பரிசு, மொத்தம் ரூ.125 கோடி- கேரளா பம்பர் லாட்டரி விவரம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
DMK BJP Alliance:
DMK BJP Alliance: "மோடியை விமர்சிக்க வேண்டாம்.." மு.க.ஸ்டாலின் தந்த அட்வைஸ்! அப்போ திமுக - பாஜக கூட்டணி உறுதியா?
Cheap EV with 400KM Range: நிஜமாவே 400KM ரேஞ்ச் தரும் SUV, 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் கார் - EMI விவரங்கள், அம்சங்கள்
நிஜமாவே 400KM ரேஞ்ச் தரும் SUV, 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் கார் - EMI விவரங்கள், அம்சங்கள்
Upcoming Toyota SUV Cars: கெத்தா.. மாஸா.. வரப்போகுற டொயோட்டோவின் 5 எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Toyota SUV Cars: கெத்தா.. மாஸா.. வரப்போகுற டொயோட்டோவின் 5 எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
"தொட்டுப் பார்க்க முடியாது.. நான் ரவுடிக்கு ரவுடி.." முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் சர்ச்சைப் பேச்சு
Embed widget