மேலும் அறிய

Petrol, Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? இன்றைய நிலவரம் இதுதான்!

வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Petrol Diesel Price: சென்னையில் மாற்றமின்றி தொடர்ந்து 17 மாதங்களை கடந்து விட்ட நிலையில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.

பெட்ரோல், டீசல்:

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 28ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 525வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 17 மாதங்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
Puducherry budget : புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் பச்சைக்கொடி! ரூ.14,300 கோடி ஒப்புதல்
Puducherry budget : புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் பச்சைக்கொடி! ரூ.14,300 கோடி ஒப்புதல்
பட்ஜெட் ஒப்புதலில் தாமதம்... நிதிச்சுமை குறித்து கேள்வி எழுப்பிய டெல்லி: புதுச்சேரி அரசு கொடுத்த அதிரடி ரிப்போர்ட்!
பட்ஜெட் ஒப்புதலில் தாமதம்... நிதிச்சுமை குறித்து கேள்வி எழுப்பிய டெல்லி: புதுச்சேரி அரசு கொடுத்த அதிரடி ரிப்போர்ட்!
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே குஷி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- இன்றைய நிலவரம் இதோ..
வாரத்தின் முதல் நாளே குஷி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- இன்றைய நிலவரம் இதோ..

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Carens Clavis EV: 490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
Gold and silver rate today : ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
Embed widget