Petrol Diesel Price Today: மீண்டும் குறைந்ததா பெட்ரோல் டீசல் விலை? சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?
Petrol Diesel Price Today, March 16: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Petrol Diesel Price Today, March 16: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எந்தவித மாற்றமும் இன்றி, அதே நிலையில் தொடர்கிறது.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்?
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை ரூ.92.34-ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, அடுத்த சில நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோது ஏற்றப்பட்ட, எரிபொருட்களின் விலை தற்போது மேலும் குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடம் நிலவுகிறது. அப்படி நடந்தால், பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் மீதான செலவு குறையும் என்பதே உண்மையாகும்.
663 நாட்களுக்குப் பின் வந்த மாற்றம்:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு, எரிபொருள் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையை நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும், எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு ஒரு முறையும் மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால், 663 நாட்களுக்கும் மேலாக, நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்தது. இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பாக பெட்ரோல், டீசல் விலை திடீரென 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்தது. இந்த விலை குறைப்பானது நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது. முன்னதாக கடந்த 8ம் தேதி மகளிர் தினத்தை கருத்தில் கொண்டு எரிவாயு சிலிண்டரின் விலையில் 100 ரூபாயை மத்திய அரசு குறைத்தது.
2014ம் ஆண்டு பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றபோது, பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர் எதிராக பெட்ரோல், டீசல் விலை மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. அதோடு, பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றி அமைக்கலாம் என்ற நடைமுறயையும் பாஜக தலைமையிலான அரசு அறிமுகப்படுத்தியது. இந்த முறைக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலே சென்றது. வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சபட்சமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.