மேலும் அறிய

Petrol, Diesel Price: வாகன ஓட்டிகளுக்கு ஒரு நற்செய்தி... இன்றும் மாறாத பெட்ரோல், டீசல் விலை... இன்றைய நிலவரம்!

Petrol, Diesel Price: சென்னையில் 82ஆவது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.

சென்னையில் 82ஆவது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது.  கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில்  கடந்த 2021ஆம் ஆண்டு  நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

அதன்பின் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். விலையைக் குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார்.


Petrol, Diesel Price: வாகன ஓட்டிகளுக்கு ஒரு நற்செய்தி... இன்றும் மாறாத பெட்ரோல், டீசல் விலை... இன்றைய நிலவரம்!

இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. 

இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 82ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( ஆகஸ்ட்.11) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.

தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் அரசு கடன் - உடனே விண்ணப்பிக்கலாம்!
தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் அரசு கடன் - உடனே விண்ணப்பிக்கலாம்!
Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Upcoming Kia SUV: கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Embed widget