மேலும் அறிய

TABCEDCO Loan Schemes: விவசாயிகளுக்கான எளிய கடன் - வெறும் 6% மட்டுமே வட்டி - கொட்டி கொடுக்கும் தமிழக அரசு

TABCEDCO Loan Details in Tamil: பிற்படுத்தப்பட்டோருக்கான தமிழக அரசின் டாப்செட்கோ அமைப்பு வழங்கும், கறவை மாடுகளுக்கான கடன் திட்டம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

TABCEDCO  Loan Schemes: பிற்படுத்தப்பட்டோருக்கான தமிழக அரசின் டாப்செட்கோ அமைப்பு, அதிகபட்சமாக இரண்டு கறவை மாடுகளை வழங்க கடன் வழங்குகிறது.

கறவை மாட்டுக் கடன்:

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் / இணையம், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களை பயனாளிகளாக தேர்வு செய்து ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000 வரையிலான திட்ட மதிப்பீட்டில் கடன் வழங்க பரிந்துரை செய்து, இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் வாங்குவதற்காக கடன் வழங்கப்படும். இதனை விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியில் ஈடுபட முயல்பவர்கள் பயன்படுத்தி பலன் பெறலாம்.

ஆண்டு வட்டி விகிதம்:  6 முதல் 8% வட்டி விகிதம்

திருப்பி செலுத்தும் காலம் - 3 முதல் 8 ஆண்டுகள் காலம்

விண்ணப்பதாரருக்கான தகுதிகள்:

  • மாநில (அல்லது) மத்திய பட்டியலில் உள்ளபடி பயனாளி பிற்படுத்தப்பட்டோர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினராக பட்டியலில் உள்ளபடி இருக்க வேண்டும்.
  • குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.3,00,000/-க்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
  • பயனடைவோரின் வயது வரம்பு 18 ஆண்டுகளுக்கு மேல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

கடன் விண்ணப்பப் படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும்:

  • சென்னையில் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகம்.
  • மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் மண்டல மேலாளர்.
  • கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.
  • கூட்டுறவு கடன் சங்கங்கள் / வங்கிகள்.

அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து கீழ்க்காணும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர் / மண்டல மேலாளர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் / கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.

  • சாதி, வருமான மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்.
  • குடும்ப அட்டை (Ration card)
  • நிதி உதவி பெறுவதற்கான ஆவணங்கள்
  • ஆதார் அட்டை

கடன் வழங்கும் முறை

பயனாளிகளுக்கு கடன் தொகை வழங்குவதற்கும், வசூல் செய்வதற்கும், 

  • மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் / நகர கூட்டுறவு வங்கிகள்.
  • தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட துணை முகவர்களாக செயல்படுகின்றன.

கூட்டுறவு வங்கிகளில் கடன் தொகை கோரி பெறப்படும் விண்ணப்பங்கள், சம்மந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் பரிசீலனை செய்யப்படும். பயனாளியின் செயல்பாடு, தகுதி மற்றும் கடனை திருப்பி செலுத்தும் திறன் குறித்து ஆய்வு செய்து பின்னர் விண்ணப்பங்கள் மாவட்ட அளவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலான கூர்ந்தாய்வுக் குழுவின் முன் வைக்கப்பட்டு, அக்குழு கடன் வழங்குவதற்கான பரிந்துரையை வழங்கும். கடன் தொகையினை, திட்டத்தினைப் பொறுத்து, மாதாந்திரம்/காலாண்டு அடிப்படையில், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குத் திரும்பச் செலுத்திட வேண்டும்.

அபராத வட்டி

கடன் தொகையினை தவணை தேதியில் திரும்பச் செலுத்தாதவர்களிடமிருந்து ஆண்டுக்கு 5% அபராத வட்டி வசூலிக்கப்படும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget