மேலும் அறிய

Home Loan Balance Transfer: வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றுவது எப்படி? எப்போது மாற்றலாம்?

Home Loan Balance Transfer: ஒரு வங்கியில் பெற்ற வீட்டுக் கடனை மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றுவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Home Loan Balance Transfer: வீட்டுக் கடனை மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றும்போது, கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

வீட்டுக் கடனை மாற்றுவது என்றால் என்ன?

நீங்கள் குறிப்பிட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் வீட்டுக் கடன் பெற்றிருந்தால், அந்தக் கடனை வேறு நிதி நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். இந்த செயல்முறை வீட்டு கடன் இருப்பு பரிமாற்றம் என்று அழைக்கப்படுகிறது.  உங்கள் தற்போதைய கடனை விட வேறு சில வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தை வழங்கும்போது, இந்த இருப்பு பரிமாற்றம் நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும். குறைந்த வட்டி என்பது நீங்கள் செலுத்தும் மாதாந்திர தவணை தொகையையும் குறைக்கும். அதோடு நீங்கள் செலுத்தும் வட்டி குறைவதால் உங்களுக்கான சேமிப்பும் கிடைக்கும். அதேநேரம், இந்த நடவடிக்கையை எடுக்கும் முன்பு சில அம்சங்களை பரிசீலிக்க வேண்டும். 

பரிசீலிக்க வேண்டிய அம்சங்கள்:

  • புதிய கடன் வழங்குபவரின் வட்டி விகிதங்களை சரிபார்க்கவும்:

 புதிய கடன் வழங்குபவர் குறைந்த வட்டி விகிதத்தை விளம்பரப்படுத்தினால், அவர்களின் வட்டி பதிவு பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறுவது அவசியம். வங்கி வழங்கும் வட்டி விகிதம் உண்மையானதா மற்றும் குறுகிய கால கவர்ச்சி அறிவிப்பா என்பதை உறுதிப்படுத்துங்கள்

  • புதிய கடன் வழங்குபவரின் சேவைத் தரத்தைப் பற்றி அறியவும் 

எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நீங்கள் தேர்வு செய்யும் புதிய வங்கி வழங்கும் சேவையின் தரத்தைச் சரிபார்க்கவும். குறைந்த கட்டணம் என்பது குறைந்த சேவையின் விலையில் வரக்கூடாது. 

  • பரிவர்த்தனை செலவு பற்றிய யோசனையை பெறுங்கள்

சில வங்கிகளில் முன்கூட்டியே கட்டணம் வசூலிக்கப்படலாம். அத்தகைய கட்டணம் ஏதேனும் உள்ளதா என ஏற்கனவே உள்ள உங்கள் கடன் வழங்குனருடன் சரிபார்க்கவும்.  புதிய கடனின் புராசசிங் கட்டணத்தையும் சரிபார்க்கவும். இது பொதுவாக நிலுவையில் உள்ள கடன் தொகையில் ஒரு சதவீதமாகும். 

  • வட்டி நிலையானதா அல்லது மாறக்கூடியதா என்பதைச் சரிபார்க்கவும் :

ஃப்ளோட்டிங் ரேட் கடன்களுக்கான வட்டி விகிதம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது- பெஞ்ச்மார்க் விகிதம் மற்றும் அதற்கு மேல் உயர்வது. எனவே புதிய நிதி நிறுவனத்தில் கூறப்படும் வட்டி நிலையானதா அல்லது நிலையற்றதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.

  • மாற்றத்திற்கான அவகாசம்

 கடன் பரிமாற்றச் செயல்முறை முழுமையடய விண்ணப்பித்த நாளிலிருந்து 10-15 நாட்கள் ஆகலாம் மற்றும் உங்கள் தற்போதைய வங்கி பொதுவாக சொத்து ஆவணங்களை புதிய வங்கியிடம் ஒப்படைக்க கூடுதலாக 10-20 நாட்கள் ஆகலாம். 

வீட்டுக் கடனை மாற்றுவது எப்படி?

1.  தற்போதைய கடனளிப்பவரிடம் விண்ணப்பியுங்கள்

ஒரு கடிதம் அல்லது படிவத்தின் மூலம் நீங்கள் இருப்புப் பரிமாற்றத்தைத் நாடுகிறீர்கள் என்று, உங்களுக்கு கடனாளித்த நிறுவனத்திற்கு தெரியப்படுத்தி அதற்கான காரணங்களை கவனமாக பட்டியலிடவும்.

 2. தடையில்லா சான்றிதழை சேகரிக்கவும்

உங்களுடய தற்போதைய கடன் வழங்குநரிடமிருந்து தடையில்லா சான்றிதழை பெறுங்கள். இது உங்கள் புதிய கடன் வழங்குநரிடம் வழங்க வேண்டி இருக்கும். 

3. ஆவணங்களை ஒப்படைக்கவும்

புதிய கடன் வழங்குபவரைத் தொடர்புகொண்டு உங்கள் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்கவும். NOC மற்றும் KYC ஆவணங்கள் போன்ற அத்தியாவசிய ஆவணங்களைச் சமர்ப்பிப்பதைத் தவிர, உங்கள் சொத்து ஆவணங்கள், கடன் இருப்பு மற்றும் வட்டி அறிக்கைகள் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.

4. பழைய கடன் வழங்குநரிடம் உறுதிப்படுத்துங்கள்

உங்களின் அனைத்து ஆவணங்களையும் உங்கள் புதிய கடன் வழங்குநரிடம் சமர்ப்பித்த பிறகு, உங்கள் கடன் கணக்கை மூடுவது தொடர்பான பழைய கடனாளியின் இறுதி உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கவும். கடன் ஒப்பந்தம் முடிவடைந்ததை இது சான்றளிக்கிறது. 

5. சம்பந்தப்பட்ட அனைத்து கட்டணங்களையும் செலுத்தி புதிதாக தொடங்கவும்

உங்கள் புதிய கடன் வழங்குனருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்துங்கள். இது முடிந்ததும், உங்கள் அடுத்த மாதத்திற்கான EMI-ஐ உங்கள் புதிய கடனாளிக்கு செலுத்தலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
விஜய்க்கு தலைவலியை தரும் நிர்வாகிகள்;  தவெகவினர் மீது வழக்கு பதிவு.. ஏன் தெரியுமா ?
விஜய்க்கு தலைவலியை தரும் நிர்வாகிகள்; தவெகவினர் மீது வழக்கு பதிவு.. ஏன் தெரியுமா ?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
TNPSC Notification: வந்தாச்சு அடுத்த அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Notification: வந்தாச்சு அடுத்த அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
Embed widget