மேலும் அறிய

Income Tax: இந்தியாவில் வருமான வரியே இல்லாத ஒரு மாநிலம் இருக்கு தெரியுமா? அதுக்கு இப்படி ஒரு காரணமா?

Income Tax: இந்தியாவில் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் பொதுமக்களுக்கு, வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Income Tax: இந்தியாவில் ஒரு மாநிலத்தில் மட்டும் பொதுமக்களுக்கு, வருமான வரி செலுத்துவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது ஏன் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

இந்தியாவில் வருமான வரி இல்லாத மாநிலம்:

கடந்த 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரி செலுத்துவதற்கான அவகாசம் வரும் ஜுலை 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதற்குள், வருமான வரி வரம்பிற்குள் உள்ளவர்கள், வருமான வரி செலுத்த வேண்டியது அவசியம். தவறினால் அபராதம் செய்ய வேண்டி இருக்கும். வருமான வரிச் சட்டம், 1961, இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வதை கட்டாயமாக்குகிறது. அதேநேரம், இந்தியாவில் தங்கள் வருமானத்திற்கு, ஒரு ரூபாய் கூட வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை என்ற மாநிலமும் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இம்மாநில மக்கள் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் சம்பாதித்தாலும், அவர்கள் 1 ரூபாய் கூட வருமான வரியாக செலுத்த வேண்டாம் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. 

சிக்கிமிற்கு மட்டும் வருமான வரியிலிருந்து விலக்கு ஏன் தெரியுமா?

இந்தியாவில் ஒரே ஒரு மாநிலம் மட்டுமே வரியில்லா மாநிலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறப்பு அங்கீகரத்தை கொண்டுள்ள மாநிலத்தின் பெயர் சிக்கிம். இந்த மாநிலத்தில் வசிப்பவர்கள் வருமான வரியாக ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 372 (F) இன் படி, சிக்கிம் மக்கள் வரிவிதிப்பு வரம்பிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ளனர். இது ஏன் என்பதை தெரிந்துகொள்ள விரும்பினால், அதற்கு முதலில் சிக்கிமின் வரலாற்றையும் நாம் அறிய வேண்டும்.

சிக்கிம் மாநிலம் கடந்த 1975ம் ஆண்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அந்த நேரத்தில், சிக்கிம் அதன் பழைய சட்டங்களையும் சிறப்பு அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொள்ளும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அதனை இந்தியா ஏற்றதை தொடர்ந்து, சிக்கிம் நமது நாட்டுடன் இணைந்தது. அதன்படி, சிக்கிமின் பூர்வீக குடியிருப்பாளர்கள் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10 (26AAA) இன் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். அரசியலமைப்பின் 371 எஃப் பிரிவின் கீழ் சிக்கிம் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிவு 10 (26AAA) சிக்கிமில் வசிக்கும் எந்தவொரு நபரின் வருமானம், வட்டி அல்லது ஈவுத்தொகை எந்தவொரு பாதுகாப்பிலிருந்தும் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். சிக்கிம் இந்தியாவுடன் இணைவதற்கு முன்பு அதில் குடியமர்த்தப்பட்ட நபர்கள், 1961 ஆம் ஆண்டு சிக்கிம்  ஒழுங்குமுறைப் பதிவேட்டில் பெயர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வருமான வரிச் சட்டத்தின் 10 (26AAA) பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது.    

இதனிடையே, டிவிட்டரில் வருமான வரித் துறை வழங்கிய தகவலின்படி, கடந்த 26ம் தேதி வரையில் 2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி கணக்குகளை 5 கோடிக்கும் அதிகமானோர் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Kappu Kattu: தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை -  ஹாப்பி அண்ணாச்சி
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை - ஹாப்பி அண்ணாச்சி
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Kappu Kattu: தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை -  ஹாப்பி அண்ணாச்சி
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை - ஹாப்பி அண்ணாச்சி
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Bhogi 2025 Wishes: எரிவது சோகங்களாகவும், ஜொலிப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.. போகிப்பண்டிகை வாழ்த்துகள்
Bhogi 2025 Wishes: எரிவது சோகங்களாகவும், ஜொலிப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.. போகிப்பண்டிகை வாழ்த்துகள்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Bhogi Festival History: நன்மைகளே சூழ வேண்டுதல்; போகிப் பண்டியின் சிறப்பும் வரலாறும்..
நன்மைகளே சூழ வேண்டுதல்; போகிப் பண்டியின் சிறப்பும் வரலாறும்..
Madha Gaja Raja: மாஸ் ஹிட் அடித்த மதகஜராஜா! நாளுக்கு நாள் எகிறும் கூட்டம்! 12 வருஷ காத்திருப்புக்கு பலன்
Madha Gaja Raja: மாஸ் ஹிட் அடித்த மதகஜராஜா! நாளுக்கு நாள் எகிறும் கூட்டம்! 12 வருஷ காத்திருப்புக்கு பலன்
Embed widget