SBI FD Rates: 'ஃபிக்சட் டெப்பாசிட்' வட்டி விகிதங்களை உயர்த்திய ஸ்டேட் பேங்க்…
SBI இந்த விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.10% அதிகரித்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஜனவரி 22 சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ மீண்டும் நிலையான வைப்பு வட்டி விகிதத்தை (எஸ்பிஐ எஃப்டி) உயர்த்தியுள்ளது. முன்னதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஷார்ட் டெர்ம் FDகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது. தற்போது மீண்டும் ஒரு வாரத்திற்குள் SBI இந்த இரண்டாவது பெரிய உயர்வைச் செய்துள்ளது. ஸ்டேட் வங்கியின் கூற்றுப்படி, இந்த முறை 10 வருட கால FDகளுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஸ்டேட் வங்கி நீண்ட காலத்திற்குப் பிறகு FD விகிதத்தை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்பிஐயின் அதிகரித்த (SBI FD Rate) வட்டி விகிதங்கள் ஜனவரி 22 முதல் பொருந்தும். ஸ்டேட் வங்கியின் (State Bank of India) கூற்றுப்படி, எஃப்டிகளுக்கான வட்டி விகிதங்கள் 7 நாட்களில் இருந்து 10 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
SBI இந்த விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.10% அதிகரித்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஜனவரி 22 சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. FD விகிதத்தை அதிகரித்த பிறகு, ஸ்டேட் வங்கி தற்போது அதன் வைப்புதாரர்களுக்கு 2 கோடி ரூபாய்க்கும் குறைவான FD களுக்கு 5.10 சதவீத வட்டி அளிக்கிறது. முன்பு இந்த வட்டி விகிதம் 5 சதவீதமாக இருந்தது. ஒரு வாரத்திற்குள், ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எஃப்டி விகிதத்தை இரண்டு முறை உயர்த்தியதன் பலனை வழங்கியுள்ளது. மறுபுறம், ஸ்டேட் வங்கி, சாதாரண டெபாசிட்களை விட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்க முடிவு செய்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு, 2 கோடிக்கும் குறைவான FDக்கு 5.60 சதவீத வட்டி கிடைக்கும். முன்பு இந்த விகிதம் 5.50 சதவீதமாக இருந்தது.
- 7-45 நாட்கள் - சாதாரண குடிமக்களுக்கு 2.90 % ஆகவும், மூத்த குடிமக்களுக்கு 3.40 % ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
- 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை சாதாரண குடிமக்களுக்கு 3.90 % மூத்த குடிமக்களுக்கு 4.40 % என்றும்,
- 180 முதல் 210 நாட்கள் சாதாரண குடிமக்களுக்கு 4.40% மூத்த குடிமக்களுக்கு 4.90 % என்றும்,
- 211 முதல் 1 ஆண்டின் குறைவான நாட்கள் சாதாரண குடிமக்களுக்கு 4.40 % மூத்த குடிமக்களுக்கு 4.90 % என்றும்,
- 1 வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவானது சாதாரண குடிமக்களுக்கு 5.10 % மூத்த குடிமக்களுக்கு 5.60 % என்றும்,
- 2 வருடம் முதல் 3 வருடங்களுக்கும் குறைவானது சாதாரண குடிமக்களுக்கு 5.10 % மூத்த குடிமக்களுக்கு 5.60 % என்றும்,
- 3 வருடம் முதல் 5 வருடங்களுக்கும் குறைவானது சாதாரண குடிமக்களுக்கு 5.30 % மூத்த குடிமக்களுக்கு 5.80 % என்றும்,
- 5 வருடம் முதல் 10 வருடம் சாதாரண குடிமக்களுக்கு 5.40 % மூத்த குடிமக்களுக்கு 6.20 % என்றும் உயர்த்தப்பட்டுள்ளது.