மேலும் அறிய

PPF: பிபிஎஃப் திட்டத்தில் அதிக வட்டி பெறுவது எப்படி? இந்த தேதிக்குள் கட்டினால் இவ்வளவு லாபமா?

இந்த திட்டத்தில் அதிக லாபத்தை பெற, நிதியாண்டின் ஆரம்பமான ஏப்ரல் 1 முதல் 4க்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இதே நடைமுறையை மற்ற மாதங்களிலும் பின்பற்ற வேண்டுமாம்.

பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் தபால் நிலையங்களிலும் வங்கிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு பிரபலமான சேமிப்பு திட்டமாகும். பிபிஎஃப் என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் திட்டம் பாதுகாப்பாக, முதலீட்டுக்கு பங்கமில்லாத ஒரு முதலீட்டு திட்டமாக உள்ளது. பாதுகாப்பாக முதலீடு செய்ய நினைப்போருக்கு, அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது ஒரு சரியான திட்டம் தான். இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. தற்போது இந்த விகிதம் 7.1% ஆக உள்ளது. இந்த திட்டத்தில் 25 வயதான ஒருவர் இணைகிறார் என வைத்துக் கொள்வோம்.அவர் மாதம் 35000 ரூபாய் சம்பாதிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரின் முதலீட்டில் தினசரி 150 ரூபாய் செலவிடுவது என்பது பிரச்சனையாக இருக்காது. ஆக மொத்தம் மாதம் அவர் 4500 ரூபாய் முதலீடு செய்வார். இதன் மூலம் வருடத்திற்கு 54,000 ரூபாய் முதலீடு செய்வார். ஒருவர் 20 வருடம் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். மொத்தம் 10.80 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பார். இதன் மூலம் முதிர்வு காலத்தில் 20 லட்சம் ரூபாய் முதிர்வு தொகையாக கிடைக்கும். இதில் கூடுதலாக வரிச்சலுகையும் கிடைப்பதால் இன்னும் சிறப்பானதொரு திட்டமாக பார்க்கப்படுகிறது.

PPF: பிபிஎஃப் திட்டத்தில் அதிக வட்டி பெறுவது எப்படி? இந்த தேதிக்குள் கட்டினால் இவ்வளவு லாபமா?

இந்த திட்டத்தின் கால வரம்பு 15 வருடம் என்றாலும், இந்த திட்டத்தின் முதிர்வுக்கு பின்னரும் 5 வருட தொகுதிகளாக தொடரலாம் என்பதால், இது இன்னும் கூடுதல் நன்மையாக பார்க்கப்படுகிறது. அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் முதலீடு செய்கையில், குறிப்பிட்ட தேதியை பின்பற்றினால் நல்ல வருமானத்தை ஈட்டலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதனை மாதம் மாதமாக பிரித்தும் ஒட்டுமொத்தமாக நிதி ஆண்டு இறுதியிலும் கட்டலாம். பெரும்பாலும் சம்பளதாரர்கள் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்வது வழக்கம். ஏனெனில், நிதியாண்டு இறுதியில் வரிவிலக்கிறகு உதவியாக அமைந்திடும். திட்டத்தில் அதிக லாபத்தை பெற, நிதியாண்டின் ஆரம்பமான ஏப்ரல் 1 முதல் 4க்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இதே நடைமுறையை மற்ற மாதங்களிலும் பின்பற்ற வேண்டுமாம். மாதத்தின் 5 ஆம் தேதிக்குள் முதலீடு செய்தால், நல்ல லாபத்தை பெறலாம் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். அதற்கு காரணம் என்னவென்றால், PPF கணக்கின் வட்டி ஆண்டுதோறும் கணக்கிடப்பட்டு, நிதியாண்டின் இறுதியில் அக்கவுண்டில் செலுத்தப்படும்.

PPF: பிபிஎஃப் திட்டத்தில் அதிக வட்டி பெறுவது எப்படி? இந்த தேதிக்குள் கட்டினால் இவ்வளவு லாபமா?

ஒவ்வொரு மாதத்திலும் ஐந்தாம் தேதிக்கு முன்பு, கணக்கில் உள்ள தொகைக்கு தான் வட்டி கணக்கிடப்படும். பிபிஎஃப் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் கணக்கில் 5 ஆம் தேதி முதல் மாதத்தின் கடைசி தேதி வரையிலான தொகை தான் வட்டிக்கு கணக்கிடப்படுகிறது. இந்த வட்டி ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்பட்டாலும், நிதியாண்டின் இறுதியில் தான் செலுத்தப்படும். நாம் PPF இல் வருடாந்திர முதலீடு செய்ய விரும்பினாலும், அதிகப்பட்ச லாபத்திற்கு ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் செய்தால் இதே கணக்குப்படி அதிக வட்டித் தொகை பெறலாம். தற்போது, PPF திட்டமானது ஆண்டுக்கு 7.1% வட்டியை வழங்குகிறது. ஆண்டுதோறும் வட்டி கூட்டப்பட்டு 15 ஆண்டுகளில் திட்டம் முதிர்ச்சி அடையும் போது, வட்டி தொகையுடன் பணத்தை பெறலாம். இந்தத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு தங்களது கணக்கை கட்டாய முதிர்ச்சி காலத்திற்கு பிறகும் கூடுதலாக 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. முக்கிய அம்சமாக, பிபிஎஃப் டெபாசிட்டுகளுக்கு பிரிவு 80சியின் கீழ் வரிச் சலுகையைப் பெறலாம். அதில், கிடைக்கும் வட்டி தொகைக்கும், மொத்த முதிர்ச்சி தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பிபிஎஃப் டெபாசிட்டுக்கான தற்போதைய வட்டி விகிதம் 7.1ஆகும். ஒருவர் 25 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை சம்பாதிக்க முடியும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget