search
×

Insurance: 399 செலுத்தினால் 10 லட்சம் வரை விபத்து காப்பீடு.. இது முக்கியம் மக்களே.. முழு விவரம்..

திண்டுக்கல் தபால் பிரிவின் மண்டல கண்காணிப்பாளர் வெறும் ரூ. 399/- செலுத்தினால் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US: 
Share:

ரூபாய் 399 செலுத்தினால் 10 லட்சம் வரை விபத்துக் காப்பீட்டுத் தொகையை பெறலாம்.

திண்டுக்கல் தபால் பிரிவின் மண்டல கண்காணிப்பாளர் வெறும்  ரூ. 399/- செலுத்தினால் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு கிடைக்கும் என தெரிவித்துள்ளார். தினந்தோறும் தமிழகத்தில் பல இடங்களில் சாலை விபத்துகள் நடந்து வருகிறது. ஆனாலும் வாகன ஓட்டிகள் விபத்து காப்பீடு (insurance) இல்லாமல் தான் வாகனத்தில் பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக ஒரு விபத்து ஏற்பட்டால் பல்வேறு சிக்கலுக்கு ஆளாகின்றனர்.

திண்டுக்கல் தபால் பிரிவின் மண்டல  கண்காணிப்பாளர் வெறும்  ரூ. 399/- செலுத்தினால் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு கிடைக்கும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் அஞ்சல் பிராந்திய  கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

"இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, TATA AIG, ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் உடன் இணைந்து, ரூ. 10 லட்சம் விபத்துக் காப்பீட்டுத் தொகையைப் பெற, ஆண்டுக்கு ரூபாய் 399/- செலுத்தும் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும், இத்திட்டமானது தபால்காரர்கள் மற்றும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களால் செயல்படுத்தப்படுகிறது என கூறப்பட்டிருந்தது.

18 வயது முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள்  இந்தத் திட்டத்தில் சேரலாம் எனவும், இந்த திட்டத்தில் இணைய எந்த ஒரு சான்றிதழ் சரிபார்ப்பும் இருக்காது. திட்டத்தில் சேர விரும்புபவர்கள் தபால் அலுவகத்துக்குச் சென்று, தங்கள் கைரேகைகளை பதிவு செய்து, 5 நிமிடத்திற்குள் இணைய முடியும்.

இந்த நன்மை பயக்கும் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதன் மூலம், எதிர்பாராத விபத்துக்களால் ஏற்படும் மருத்துவ செலவுகளையும், விபத்துகளால் ஏற்படும் இறப்புகளின் போது ஏற்படும் நிதி உதவியையும் மக்கள் பெறலாம்! மேலும் குடிமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தபால்காரர் அல்லது தபால் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று நன்மை அளிக்கும் இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்! இந்த திட்டமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Published at : 23 Oct 2022 11:32 AM (IST) Tags: post office Rs. 399 rs.399 10 lakh cover

தொடர்புடைய செய்திகள்

Ajith Kumar: அஜித் செய்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியல.. கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சி!

Ajith Kumar: அஜித் செய்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியல.. கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சி!

EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!

EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!

Bank FD Risk: பேங்க்ல எஃப்.டி,. போட போறிங்களா? இந்த 5 ஆபத்துகளை கட்டாயம் தெரிஞ்சுக்கங்க..!

Bank FD Risk: பேங்க்ல எஃப்.டி,. போட போறிங்களா? இந்த 5 ஆபத்துகளை கட்டாயம் தெரிஞ்சுக்கங்க..!

Income Tax Rate Cuts: தேர்தலில் சறுக்கல்..! பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க மோடி அரசு ஆலோசனை, யாருக்கு ஜாக்பாட்?

Income Tax Rate Cuts: தேர்தலில் சறுக்கல்..! பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க மோடி அரசு ஆலோசனை, யாருக்கு ஜாக்பாட்?

EPFO: பி.எஃப்., பயனாளர்களே.. திட்டச் சான்றிதழ் பற்றி தெரியுமா? பென்ஷன் வாங்க இது ரொம்ப முக்கியம்பா..!

EPFO: பி.எஃப்., பயனாளர்களே.. திட்டச் சான்றிதழ் பற்றி தெரியுமா? பென்ஷன் வாங்க இது ரொம்ப முக்கியம்பா..!

டாப் நியூஸ்

"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!

ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!

Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!

இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை; துணை மருத்துவப் படிப்புக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை; துணை மருத்துவப் படிப்புக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு