Mutual Funds Investment Plan: SIP மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்தால் இவ்வளவு பயனா?
உதாரணத்திற்கு, உங்ளுடைய 25 வயதில் நீங்கள் முதலீடு செய்ய தொடங்குவதாக வைத்து கொள்ளலாம். மாதம் 5000 ரூபாய் என நாளொன்றுக்கு 167 ரூபாயை நீங்கள் SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் உங்களுடைய ஓய்வு காலத்தில், அதாவது 60 வயதில் 11.33 கோடி ரூபாய் சேமிப்பு பணம் உங்களுக்கு சொந்தமாகும்.
வருமானம் ஈட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதே போல பணத்தை சேமிப்பதும், பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்வதும் மிக கவனமாக பார்த்து செய்ய வேண்டியவை.
பெரும்பாலானோர், வேலைக்கு சேர்ந்தவுடன் பணத்தை சேமிக்க தொடங்கிவிடுவர். ஆனால், முதலீடு செய்யும் திட்டத்தை கையில் எடுக்க தயக்கம் காட்டுவர், தாமதப்படுத்துவர். வேலைக்கு சேர்ந்தவுடன் முதலீடு செய்ய தொடங்கினால், பின் நாளில் அந்த முதலீட்டினால் ஏற்படக்கூடிய பயன் மிக அதிகம் என முதலீட்டு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
SIP எனப்படும் முறையான முதலீடு திட்டம் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்பவர்கள், நீண்ட இடைவெளிக்கு பிறகு நிறைய பணத்தை திரும்ப பெற முடியும். வாராந்திர, மாதாந்திர, காலாண்டு அல்லது ஆண்டு தோறும் வழக்கமான இடைவெளியில் பணம் முதலீடு செய்யும் முறைதான் SIP எனப்படும் முறையான முதலீடு திட்டம். நீங்கள் செய்யும் ஒவ்வொரு முதலீடும் பின் நாளில், உங்களுக்கு பயன் அளிக்க கூடியதாக இருக்கும்.
அஞ்சலகத்தில் மிடில் க்ளாஸ் சேமிப்புத்திட்டங்கள் என்ன? இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது, குழந்தைகளின் படிப்பு, திருமண செலவு போன்ற வாழ்க்கை தேவைக்கு ஏற்ப, முக்கியமான நேரங்களில் பணத்தை எடுக்கும் வகையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இருக்க வேண்டியது அவசியம். இதை உறுதிப்படுவது முக்கியம்.
உதாரணத்திற்கு, உங்ளுடைய 25 வயதில் நீங்கள் முதலீடு செய்ய தொடங்குவதாக வைத்து கொள்ளலாம். மாதம் 5000 ரூபாய் என நாளொன்றுக்கு 167 ரூபாயை நீங்கள் SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் உங்களுடைய ஓய்வு காலத்தில், அதாவது 60 வயதில் 11.33 கோடி ரூபாய் சேமிப்பு பணம் உங்களுக்கு சொந்தமாகும்.
மாத முதலீடு- ரூ. 5000
திரும்பப் பெற கூடிய பணம் (தோராயமாக) – 14%
SIP மூலம் வருடாந்திர பண இருப்பு அதிகரிப்பு – 10%
முதலீடு காலம் – 35 வருடங்கள்
35 வருடங்களில், மாதம் 5000 ரூபாய் பணம் முதலீடு செய்தால் , 11.3 கோடி ரூபாய் பணத்தை நீங்கள் திரும்ப பெறலாம். ஆனால், உங்களுடைய வருமானம் அதிகமாக அதிகமாக, SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் பணத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம்.