(Source: ECI/ABP News/ABP Majha)
அஞ்சலகத்தில் மிடில் க்ளாஸ் சேமிப்புத்திட்டங்கள் என்ன? இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
தபால் அலுவலக மாத வருமான திட்டக்கணக்கினை தனி நபர்கள் காசோலை அல்லது குறிப்பிட்ட பணத்தினை செலுத்தி தொடங்கி கொள்ளலாம். குறைந்த பட்சமாக ரூ.1500ம், அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.4.5 லட்சமும், கூட்டுக்கணக்கில் அதிகபட்சம் ரூ. 9 லட்சம் வரை என இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.
இந்தியா தபால் துறையின் மாதாந்திர வருமானத்திட்டமானது குறைந்த அளவில் பணத்தினை சேமிக்க நினைப்பவர்களுக்காக அமைந்துள்ளது. இதனை தனி நபர்கள் காசோலை அல்லது குறிப்பிட்ட பணத்தினை செலுத்தி தபால் நிலையங்களின் மூலம் தொடங்கி கொள்ளலாம்.
கொரோனா பெருந்தொற்று மக்களை பல இன்னல்களுக்கு ஆளாக்கியதோடு பலரின் வேலையினையும் இழக்கச்செய்தது. குறிப்பாக தொழில் நிறுவனங்கள், அத்தியாவசிய கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளை மக்கள் திறக்க முடியாமல் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அதோடு பணத்தின் தேவை மற்றும் அதனை சேமிக்கும் பழக்கத்தினை கைவிடக்கூடாது என்ற எண்ணத்தினையும் மக்களுக்கு விதைத்துள்ளது. இந்நிலையில் தான் தபால் நிலையங்களில் உள்ள மாதாந்திர வருமானத்திட்டம் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.
குறிப்பாக இந்தியா முழுவதும் சுமார் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்களை இந்தியா போஸ்ட் கொண்டுள்ள நிலையில், தபால் சேவை மட்டுமில்லாது மக்களுக்கு பயன்பெறும் வகையில் ஆர்.டி, எப்.டி, செல்வ மகள் போன்ற பல்வேறு நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது. இதோடு ஒவ்வொரு சேவைகளுக்கு அதற்கான வட்டி விகிதங்களையும் வழங்குகிறது. இந்நிலையில் மாதாந்திர வருமானத்திட்டத்தில் என்னென்ன அம்சங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது என தெரிந்து கொள்வோம். முதலில், இந்தியா தபால் துறையின் மாதாந்திர வருமானத்திட்டமானது குறைந்த அளவில் பணத்தினை சேமிக்க நினைப்பவர்களுக்காக அமைந்துள்ளது. இந்த தபால் அலுவலக மாத வருமான திட்டக்கணக்கினை தனி நபர்கள் காசோலை அல்லது குறிப்பிட்ட பணத்தினை செலுத்தி தொடங்கி கொள்ளலாம். குறைந்த பட்சமாக ரூ.1500ம், அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.4.5 லட்சமும், கூட்டுக்கணக்கில் அதிகபட்சம் ரூ. 9 லட்சம் வரை என இந்திய தபால் துறை அறிவித்துள்ளது. இந்த சேமிப்பினை தொடங்குவதன் மூலம் ஆண்டிற்கு வட்டி விகிதமானது 6.6 சதவீதமாகவுள்ளது. மேலும் இந்த கணக்கினை துவங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு வட்டியுடன் பணத்தினைப் பெற்றுக்காள்ள முடியும். மேலும் மாதந்திர திட்டக்கணக்கினை திறந்த ஒரு வருடத்தில் பணத்தினை காசோலையாக மாற்ற முடியும். மூன்று வருடத்திற்கு முன்னதாக கணக்கினை முடித்து முதலீடு செய்த பணத்தினை எடுக்க வேண்டும் என்று நினைத்தால் இதில் 2 சதவீத வட்டி பிடித்து வைத்துக்கொள்ளப்படும் என இந்திய தபால் துறை தெரிவிக்கிறது.
குறிப்பாக வருமானத் திட்டக் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றம் செய்யமுடியும். இதோடு முதலீட்டாளர்கள் எந்தவொரு தபால் நிலையத்திலும் அதிகபட்ச முதலீட்டு வரம்புக்கு உட்பட்டு கணக்குகளை திறக்க முடியும் என்று இந்திய போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. மேலும் மாத வருமானத்திட்டக்கணக்கினை திறக்கும் நேரத்தில் யார் நாமினி என குறிப்பிடுவதையும் முறையாக மாற்றவும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் டிடிஎஸ் இல்லாததால், பிரிவு 80 c கீழ் கிடைக்கும் நன்மைகளை இதில் பெற முடியாது. ஆனால் இதில் கிடைக்கும் வட்டிகளுக்கு வரி உண்டு. நடுத்தர வர்க்கத்தினருக்கு தபால் நிலைய வருமான வரித்திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். எனவே நமக்காக சேமிப்பினை இத்திட்டத்தின் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.
இந்திய தபால் துறை தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, 5 ஆண்டு தபால் அலுவலகம் தொடர்ச்சியான வைப்பு கணக்கு, தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு, தபால் அலுவலக மாத வருமான திட்ட கணக்கு, மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு கணக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டுள்ளது. எனவே இதுவரை தங்களது சேமிப்புக் கணக்கினை தொடங்காத மக்கள், தங்களின் வசதிக்கேற்ப இனிமேலாவது சேமிப்புக்கணக்கினை துவங்கலாம். நிச்சயம் கொரோனா பெருந்தொற்று போன்ற இக்கட்டான காலக்கட்டத்தில் நம்முடைய சேமிப்பு பணம் உதவிகரமாக இருக்கும்.