(Source: ECI/ABP News/ABP Majha)
Loan for Women | சிறுதொழில் தொடங்க திட்டமா? பெண்களே.. உங்களுக்கான டாப் லோன் திட்டங்கள் இதோ..!
பெண் தொழில்முனைவோருக்கு பல வங்கிகள் மானியத்துடன் கடன் உதவியினை வழங்கி வருகிறது.
தொழில் முனைவோராக வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்காக, முத்ரா யோஜனா திட்டம், மகிளா வங்கி, அன்னபூர்ணா திட்டம் போன்ற பல்வேறு கடன் உதவி திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.
பெண்கள் சமூகத்தில் முன்னேறி வர வேண்டும் என்று நினைத்தாலும் இச்சமூகம் அவர்களை வளரவிடுவதில்லை. ஏதாவது தொழில்செய்து வெற்றிகரமாக நடத்திக்கொள்ளலாம் என்றாலும் யாரிடம் உதவி கேட்பது என்று யோசிப்பார்கள். அப்படி யோசிக்கும் பெண் தொழில்வோனைகளுக்கான பயனுள்ள தகவல்கள்தான் இது. யாரிடமும் நின்று பணம் கேட்காமல் வங்கியின் மூலம் கடன்களைப்பெற்று சிறந்த பெண் தொழில்முனைவோரகலாம். இதோ என்னென்ன திட்டங்கள் என இங்கே அறிந்து கொள்வோம்..
முத்ரா யோஜனா திட்டம்:
மத்திய அரசின் முத்ரா யோஜனா திட்டம் கடந்த 2015 ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் அல்லாத வேளாண் தொழில் சாராத நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் ஒரு சிறிய நிறுவனத்தை தொடங்க விரும்பும் பெண்களுக்கும் முத்ரா யோஜனா திட்டம் செல்லுபடியாகும். எனவே பியூட்டி பார்லர், டியூஷன் சென்டர், டைலரிங் யூனிட் போன்ற சிறு தொழில்களை மேற்கொள்ள விருக்கும் பெண் தொழில் முனைவோர் இத்திட்டத்தின் மூலம் ரூ. 50 ஆயிரம் முதல் அதற்கு மேல் கடன் தொகையினை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒருவர் ரூ. 10 லட்சத்திற்கு மேல் தாண்டினால் அவர்கள் கண்டிப்பாக இணை மற்றும் உத்தரவாதங்களை வழங்க வேண்டிருக்கும்.
மேலும் தொழில் முனைவோர்களுக்காக முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், வங்கிகள் வாயிலாக மூன்று பிரிவுகளில் கடனுதவி வழங்கப்படுகிறது. சிஷு (Shishu) என்ற பெயரில் ரூ.50,000 வரையிலும், கிஷோர் (Kishor) என்ற பெயரில் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் (Tarun) என்ற பெயரில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது. முத்ரா யோஜனா திட்டம் நேரடியாக தனிநபர் கடன்களை வழங்காமல் வங்கிகள் மற்றும் NBFCs மூலம் வழங்கப்படுகிறது. இதோடு Udyamimitra portal ல் முத்ரா கடன்களைப்பெற வேண்டும் எனில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மகிளா உதயம் நிதி திட்டம்:
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் ( (SIDBI) வழங்கப்படும் மகிலா உதயம் நிதி திட்டம் பெண் தொழில் முனைவோர்கள் சிறிய அளவிலான தொழிலை புதிதாக ஆரம்பிக்கவும், ஏற்கனவே உள்ள நிறுவனத்தினை மேம்படுத்துவதற்கும், நவீனமயமாக்குவதற்கும் உதவுகிறது. ரூ. 10 லட்சம் வரை கடன் தொகையினை பெண்கள் பெறுவதற்கான வசதிகள் உள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்குள் திருபபி செலுத்தப்பட வெண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளது. மேலும் மகிலா உதயம் நிதியின் மூலம் பெறப்படும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடக்கூடியது.
அன்னபூர்ணா திட்டம்:
பெண்களுக்கு இயல்பாகவே நன்றாக சமைக்கத்தெரியும். அதற்கு சமூக கட்டுப்பாடுகளே காரணம். எனினும், இப்போது இதுபோன்று தன் சமையலில் திறமையினைக் காண்பிக்க கேட்டரிங் தொழிலினை பெரும்பாலான பெண்கள் தற்பொழுது மேற்கொண்டுவருகின்றனர். கேட்டரிங் தொழிலில் சாதிக்க நினைக்கும் பெண் தொழில் முனைவோருக்காக அன்னபூர்ணா திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ. 50 ஆயிரம் வரை கடன் தொகையினைப் பெற்று சமையலறைக்கான அத்தியாவசிய பாத்திரங்கள், கேஸ் இணைப்புகள், மளிகைப்பொருட்கள் போன்றவற்றை வாங்கிக்கொள்ள அனுமதியளிக்கிறது. மேலும் இந்த கடனை ஒருவர் பெற வேண்டும் என்றால் உத்தரவாதம் கண்டிப்பாக தேவை. இந்த கடன் தொகையினை 36 தவணைகளில் செலுத்துக்கொள்ளக்கூடிய வசதிகள் உள்ளது. மேலும் இத்திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் அப்போதைய சந்தை நிலவரத்தின் படி நிர்ணயிக்கப்படுகின்றன.
பெண்கள் தொழில்முனைவோருக்கான ஸ்த்ரீ சக்தி தொகுப்பு:
பெண் தொழில்முனைவோரை ஆதரளிக்கும் வகையில் சிறப்பு சலுகைகளை ஸ்த்ரீ சக்தி தொகுப்பு கொண்டுள்ளது. ஒரு சிறு வணிகத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு பெண்களுக்கு இருக்கும் பட்சத்தில் இத்திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது. மேலும் பெண் தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தினைப்பெற வேண்டும் என்றால் அந்தந்த மாநில நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டங்களில் ( EDP) ல் சேர வேண்டும். மேலும் இதன் மூலம் வழங்கப்படும் கடன்களுக்கு உத்ரவாதம் தேவையில்லை. இந்த திட்டம் பெண்களுக்கு ரூ. 2 லட்சத்துக்கு மேல் கடன்களுக்கு 0.05 சதவீத வட்டி சலுகையினை வழங்குகிறது.
பாரதீய மகிளா வங்கி வணிக கடன்:
பெண் தொழில் முனைவோருக்காக உணவு வழங்குவதற்கான அன்னபூர்ணா கடன், பியூட்டி பார்லர் போன்ற சிறு தொழில்கள் வைப்பதற்கான கடன் என நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மைக்ரோ மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளையின் கீழ் வருகிறது. இது பெண்கள் வணிக உரிமையாளர்களுக்கு ரூ. 20 கோடி வரை கடன்களை உள்ளடக்கியது. மேலும் ரூ. 1 கோடி வரை கடன்களுக்கு செக்யுரிட்டி தேவையில்லை. .இதன் மூலம் பெறப்படும் கடன்கள் ஏழு ஆண்டுகளில் திருப்பி செலுத்தப்பட வேண்டும். இந்த திட்டத்தினை பாரதீய மகிலா வங்கி கடந்த 2017 ம் ஆண்டு ஸ்டேட் பாங்க் ஆப் வங்கியுடன் இணைத்தது.
தேனா சக்தி திட்டம்:
தேனா சக்தி திட்டம் விவசாயம், உற்பத்தி, மைக்ரோ கிரெடிட், சில்லறை கடைகள் மற்றும் இதே போன்ற சிறு நிறுவனங்களில் பெண் தொழில்முனைவோருக்கு ரூ .20 லட்சம் வரை கடன்களை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், மைக்ரோ கிரெடிட் பிரிவின் கீழ் ரூ .50,000 வரை கடன்கள் வழங்கப்படுகின்றன. தேனா வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளின்படி தேனா சக்தி திட்டத்தின் கீழ் பெறப்படும் கடன்களுக்கு வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. தேனா வங்கியால் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தற்போதுள்ள நடவடிக்கைகளுக்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளின் சலுகை அல்லது தள்ளுபடி வழங்கப்படுகிறது.
உத்யோகினி திட்டம்:
இத்திட்டம் கிராமப்புற மற்றும் வளர்ச்சியடையாத பகுதிகளைச்சேர்ந்த ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோருக்கு மானியக் கடன்களை வழங்குகிறது. சிறிய அளவிலான தொழில்களை இயக்கும் அல்லது தொடங்கும் பெண் தொழில்முனைவோருக்கு ரூ .3 லட்சம் வரை வட்டி இல்லாத கடன்களை இத்திட்டத்தின் மூலம் பெறமுடியும். மேலும் கடன்களுக்கு 30 சதவீதம் வரை மானியம் வழங்க அரசு முன்மொழிகிறது. குடும்ப வருடாந்திர வருமானம் ரூ .1.5 லட்சத்திற்கும் குறைவான 25 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்கள் தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக ஊனமுற்றோர், விதவை மற்றும் ஆதரவற்றோர் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளின் கீழ் பெண்களுக்கு வருமானத்திற்கான இந்த வரம்பு எதுவும் பொருந்தாது. மேலும் 18-45 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
சென்ட் கல்யாணி திட்டம்:
மத்திய வங்கியால் வழங்கப்படும் இந்த திட்டம், கைத்தறி, உணவு பதப்படுத்துதல், ஆடை தயாரித்தல் உள்ளிட்ட உற்பத்தி மற்றும் சேவைகளில் பல பகுதிகளில் உள்ள பெண்களுக்கான வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் ஆலை மற்றும் இன்வெஸ்ட்மெண்ட் செலவினங்களை பூர்த்தி செய்ய கடன்களை வழங்குவதாகும். இந்த திட்டத்தின் கீழ், ரூ .1 கோடி வரை கடன்கள் வழங்க அனுமதிக்கப்படுகின்றன. மேலும், கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மாறுபட்ட சந்தை விகிதங்களைப் பொறுத்து அமையக்கூடும்.
வர்த்தக தொடர்பான தொழில்முனைவோர் மேம்பாட்டு உதவித் திட்டம் (TREAD) பெண்கள் தொழில் முனைவோர் திட்டம்:
இந்த திட்டம் , பண்ணை அல்லாத துறையில் உள்ள சுய உதவிக்குழுக்களிடமிருந்து பெரும்பாலும் பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை ஈட்டும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகும். பயிற்சி, ஆலோசனை, கண்காட்சிகளில் பங்கேற்பு, புதிய சுய உதவிக் குழுக்களை நிறுவுதல் போன்ற திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான மொத்த திட்டத்தின் 30 சதவீதம் வரை அரசு மானியம் வழங்க இந்த திட்டம் வழங்குகிறது. கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்ற 70 சதவீதத்திற்கு நிதியளிக்கும்