LIC : தினமும் ரூ.235 முதலீடு செய்தால் ரூ.55 லட்சம் சம்பாதிக்கலாம்.. இந்த எல்.ஐ.சி பாலிசியை பத்தி தெரிஞ்சுகோங்க
தினமும் ரூ.235 முதலீடு செய்தால், அத்திட்டம் முதிர்ச்சி பெறும்போது ரூ.55 லட்சம் சம்பாத்திக்கலாம். மந்திரத்தில் மாங்காய் காய்க்கும் நிகழ்வல்ல இது.
தினமும் ரூ.235 முதலீடு செய்தால், அத்திட்டம் முதிர்ச்சி பெறும்போது ரூ.55 லட்சம் சம்பாத்திக்கலாம். மந்திரத்தில் மாங்காய் காய்க்கும் நிகழ்வல்ல இது.
நம்முடைய வாழ்வில் பாதுகாப்பான முதலீடு மற்றும் இன்சுரன்ஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக எல்ஐசிதான். இப்படி மக்களிடம் பல்வேறு வகைகளில் பிரபலமடைந்த எல்ஐசியின் திட்டம் ஒன்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
எல்ஐசி ஜீவன் லாப் திட்டம்: எல்ஐசி ஜீவன் லாபம் (Jeevan Labh) பாலிசியில் 800 ரூபாய் முதலீடு செய்து 5 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். ஜீவன் லாபம் ஒரு தனி பாலிசி. இதற்கும் பங்குச் சந்தைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. அதாவது, பங்குச் சந்தை உயர்ந்தாலும், சரிந்தாலும் உங்கள் பணத்துக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.
ஜீவன் லாப் ஆயுள் காப்பீட்டு திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என இரண்டையும் உறுதிப்படுத்தக் கூடியது. இந்தத் திட்டத்தில் மூன்று பிளான்கள் உள்ளன. முதல் ப்ளான் 16 வருட பாலிசி. இந்த பாலிசியில் நாம் 10 ஆண்டுகள் மட்டும் பணம் கட்டினால் போதும். அடுத்த பாலிசி 21 ஆண்டு கால பாலிசி. இதில் நாம் 15 வருடங்கள் ப்ரீமியம் செலுத்தினால் போதும்.
மூன்றாவது பாலிசியின் காலம் 25 ஆண்டுகள். இதில் நாம் 16 ஆண்டுகள் ப்ரீமியம் செலுத்தினால் போதும்.
பாலிசியின் சிறப்பம்சங்கள்:
ஜீவன் லாப் பாலிசியின் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்ப்போமா? இந்த பாலிசியில் பங்குச்சந்தை அபாயம் கிடையாது. பாலிசி காலம் முதிர்வு வரை பிரீமியம் வரை நாம் ப்ரீமியம் தொகை செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதுமட்டுமல்லாது குழந்தைகளின் கல்வி, திருமணத்திற்கான திட்டமிடுதலுக்கு இது போன்ற சிறந்த பாலிசி எதுவுமில்லை. மேலும் இந்த பாலிசியுடன் சேர்த்து நாம் ரைடர்ஸ் பாலிசைய்யும் பெற்றுக் கொள்ளவும் வழிவகை இருக்கிறது.
80சி ஆப்ஷன் இருக்கு
ஜீவன் லாப் திட்டத்தில் 80சி கீழ் வருமான வரி விலக்கு பெறும் வசதி உண்டு. அதேபோல் பாலிசி மெச்சூரிட்டி தொகைக்கும் வருமான வரி விலக்கு பெற முடியும். அதாவது இப் பாலிசியின் குறைந்தபட்ச வயது வரம்பு 8 என்றால் அதிகபட்ச வயது வரம்பு 59. இன்னும் குறிப்பிட்டு சுட்டிக்காட்ட வேண்டும் என்றால் 16 ஆண்டு பாலிசிக்கு 59 வயது. இதே 21 ஆண்டு பாலிசிக்கு வயது உச்சவரம்பு 54. 25 ஆண்டு கால பாலிசிக்கு வயது உச்ச வரம்பு 50.
ஜீவன் லாப் திட்டத்தில் குறைந்தபட்சம் 2 லட்சம் காப்பீடு. அதிகபட்ச வரம்பு என எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பாலிசிதாரர், அவர் பாலிசி எடுத்த 3வது ஆண்டில் இருந்து அதற்கு கடன் பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல் பாலிசி எடுத்த மூன்று ஆண்டுகளில் அதை சரண்டர் செய்து கொள்ளவும் முடியும். இந்த பாலிசி பிரீமீயம் அடிப்படையில் தள்ளுபடியும் உண்டு.
பாலிசியை எடுப்பவர்கள் நாமினி விவரத்தை சரியாகக் குறிப்பிட வேண்டும். அவ்வாறாக குறிப்பிட்டால் தான் வாரிசுதாரருக்கு தொகை சரியாக சென்று சேரும். ஜீவன் லாப் பாலிசிதாரர் பாலிசி காலத்தில் உயிரிழக்க நேர்ந்தால், அவருடைய வாரிசுக்கு அடிப்படை காப்பீடு தொகை, திரட்டப்பட்ட எளிய போனஸ் தொகை, இறுதி கூட்டல் போனஸ் (FAB) அனைத்தும் சேர்த்துப் பெற முடியும்.